உள்ளடக்கத்துக்குச் செல்

இராசேந்திர இலகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராசேந்திர நாத் லகிரி
பிறப்பு(1901-06-29)29 சூன் 1901
பப்னா மாவட்டம், வங்காள மாகாணம்
இறப்பு17 திசம்பர் 1927(1927-12-17) (அகவை 26)
கொண்டா சிறைசாலை,பிரித்தானிய இந்தியா
கல்விபனராஸ் இந்து பல்கலைகழகம்
அமைப்பு(கள்)இந்துத்தான் குடியரசு கூட்டமைப்பு
அரசியல் இயக்கம்இந்திய சுதந்திர போராட்ட இயக்கம்

ராசேந்திர லகிரி (29 ஜூன் 1901 - 17 டிசம்பர் 1927), முழுப் பெயர் ராசேந்திர நாத் லகிரி. இவர் ஓர் இந்திய புரட்சியாளர். இவர் கக்கோரி இரயில் கொள்ளை மற்றும் தக்சினேசுவர் குண்டுவெடிப்பின் பின்னணியில் சூத்திரதாரி ஆவார். ஆங்கிலேயர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

ராசேந்திர லகிரி 1901 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி லகிரி மோகன்பூர் கிராமத்தில் வங்காள மாகாணம் பப்னா மாவட்டத்தின் (இப்போது வங்காளதேசம்) ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை க்ஷிதிஷ் மோகன் லஹிரி ஒரு பெரிய தோட்டம் வைத்திருந்தார். [1]

தக்சினேசுவர் குண்டுவெடிப்பு சம்பவம்

[தொகு]

லகிரி இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பங்கேற்று தலைமறைவாக இருந்தார். இவர் பனராசுக்குச் சென்று தனது படிப்பை தொடங்கினார். உத்தரபிரதேசத்தில் இந்திய புரட்சிகர நடவடிக்கைகள் தொடங்கியபோது பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் எம்.ஏ. பட்டம் படிப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பில் பல வங்காள நண்பர்களுடன் சேர்ந்தார்.

கக்கோரி சதி

[தொகு]

1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9, இல் கக்கோரி ரயில் கொள்ளைக்குப் பின்னால் இவர் முக்கிய சூத்திரதாரியாக இருந்தார். வங்காளத்தில் தக்சினேசுவரின் முந்தைய குண்டு வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பத்து ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். ரயில் கொள்ளைக்காக இலக்னோவில் சட்ட நடவடிக்கைகள் தொடங்கியபோது, இவர் கக்கோரி இரயில் கொள்ளை வழக்கில் பல புரட்சியாளர்களுடன் சேர்க்கப்பட்டார்.

இறப்பு

[தொகு]

நீண்ட விசாரணைக்கு பின்னர் இவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, கோண்டா மாவட்ட சிறையில் 1927 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று, தாகூர் ரோசன் சிங், அஷ்பகுல்லா கான் மற்றும் ராம் பிரசாத் பிசுமில் ஆகியோருடன் தூக்கிலிடப்பட்டார்.

குறிப்புகள்

[தொகு]

 

  1. "Some Prominent Martyrs of India's Freedom Struggle". All India Congress Committee. Archived from the original on 2009-03-29. பார்க்கப்பட்ட நாள் 18 September 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசேந்திர_இலகிரி&oldid=3454703" இலிருந்து மீள்விக்கப்பட்டது