இராசேந்திரசோழன் (நூலாசிரியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராஜேந்திரசோழன் என்பவர் தமிழ் எழுத்தாளராவார். இவர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள மயிலத்தில் வசிக்கிறார். ஆசிரியராக இருபத்து ஒரு வருடம் பணியாற்றி விருப்பு ஓய்வு பெற்றவர். பாதல்சர்க்காரிடம் நாடகப்பயிற்சி பெற்றவர் இராசேந்திரசோழன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

படைப்புகள்[தொகு]

  • புற்றில் உறையும் பாம்புகள்[1]
  • சவாரி

உதயம், பிரச்னை ஆகிய இதழ்களின் பொறுப்பாசிரியராக இருந்துள்ளார்.மண்மொழி என்ற இதழை பல ஆண்டுகளாக வெளியிட்டு வந்தார்.அஸ்வகோஷ் என்ற புனைப்பெயரில் நாடகங்கள் பல எழுதியுள்ளார்.

பின்நவீனத்துவம் பித்தும் தெளிவும் என்ற இவருடைய கட்டுரைத்தொகுப்பு முக்கியமானது. மொழிக்கொள்கை என்ற நூல் ஆழமான விவாதங்களை எழுப்பிற்று. இராசேந்திரசோழனின் 50 சிறுகதைகளைத்தொகுத்து தமிழினி பதிப்பம் வெளியிட்டுள்ளது.அங்கதச்சுவை நிறைந்த இராசேந்திரசோழனி குறுநாவல் தொகுப்பையும் தமிழினி வெளியிட்டுள்ளது.

ஆதாரங்கள்[தொகு]

  1. https://www.jeyamohan.in/79580#.XEfaXM4zbIU ஜெயமோகன் வலைதளம்

வெளி இணைப்புகள்[தொகு]