இராசேசு பி. என். ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராசேசு பி. என். ராவ் (Rajesh P. N. Rao சூலை 2, 1970 ) அமெரிக்காவில் சியாட்டிலில் உள்ள வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் கணினித் துறையின் ஆராய்ச்சியாளர் ஆவார்.[1] இவர் இந்தியாவில் சென்னையில் பிறந்தவர்.

கல்வித் தகுதிகள்[தொகு]

இராசேசு ராவ்  ஏஞ்சிலா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் 1992 இல் கணினி அறிவியலிலும் கணிதத்திலும் பட்டம் பெற்றார். பின்னர் ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் 1994 இல் எம். எஸ். பட்டமும் 1998 இல் ஆய்வுப் பட்டமும் பெற்றார்.

பணிகள்[தொகு]

கணினி  நரம்பியல், செயற்கை நுண்ணறிவு, மனித மூளையைக் கணினி வாயிலாக ஆராய்தல் போன்ற துறைகளில் வல்லுநர். 4000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றி ஆய்வுகள் செய்து வருபவர். சிந்துசமவெளிக் காலத்தின் வரிவடிவத்தைப் புரிந்துகொள்ளும் பிரைன் கம்ப்யூட்டர் இன்டர்பேசிங் என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். இந்த நூலை கேம்பிரிட்ச் பல்கலைக்கழகப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

மூளையின் இயக்கத்தை உணர்ந்து கொள்ளும் வகையில் மின்சாரத் தொப்பியை அணிந்து கொண்டு மற்றொரு மனிதரிடம் உடலில் அசைவை உண்டாக்கினார்.[2] ஒரு மனிதனின் மூளையிலிருந்து மற்றோரு மனிதன் மூளைக்கு இணையத்தின் மூலமாக செய்திகள் பரிமாற்றம் செய்ய முடியும் என்பதை 2013 இல் செய்து காட்டினார்.

விருதுகள்[தொகு]

  • சுலோவன் பேகல்ட்டி பெல்லோஷிப், 2001
  • பாக்கார்ட்  பெல்லோஷிப்,
  • என் எஸ் எப் கேரியர் விருது 2002
  • ஓஎன்ஆர் யங் விருது 2002 

மேற்கோள்[தொகு]

  1. "Curriculum Vitae: Rajesh P.N. Rao's" (PDF). Washington.edu. September 2010. Archived from the original (PDF) on 2013-10-29. பார்க்கப்பட்ட நாள் 2017-08-23.
  2. Vergano, Dan (August 28, 2013). "Researcher remotely controls colleague's body with brain". USA Today. http://www.usatoday.com/story/tech/sciencefair/2013/08/27/human-brain-remote/2709143/. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசேசு_பி._என்._ராவ்&oldid=3574887" இலிருந்து மீள்விக்கப்பட்டது