இராசேசுவரி வேதாசலம் அரசினர் கலைக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜேசுவரி வேதாசலம் அரசினர் கலைக் கல்லூரி
குறிக்கோளுரைஅறிதோறு அறியாமை கண்டற்றால்
வகைஅரசினர் கலைக் கல்லூரி
உருவாக்கம்1970
அமைவிடம், ,
இணையதளம்http://rvgovtartscollege.com

இராஜேசுவரி வேதாசலம் அரசினர் கலைக் கல்லூரி இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் செங்கல்பட்டில் செயல்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1970ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சென்னை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[2]

வழங்கும் படிப்புகள்[தொகு]

இளநிலைப் படிப்புகள்[தொகு]

  • பி. ஏ. தமிழ்
  • பி. ஏ. ஆங்கிலம்
  • பி. ஏ. வரலாறு
  • பி. ஏ. அரசியல் அறிவியல்
  • பி. காம்.
  • பி. பி. ஏ. (வணிக மேலாண்மை)
  • பி. எஸ்சி. இயற்பியல்
  • பி. எஸ்சி. வேதியியல்
  • பி. எஸ்சி. கணிதம்
  • பி. எஸ்சி. விலங்கியல்
  • பி. எஸ்சி. கணினி அறிவியல்
  • பி. சி. ஏ. (கணினி பயன்பாடு)

முதுநிலை[தொகு]

  • எம். ஏ. தமிழ்
  • எம். ஏ. ஆங்கிலம்
  • எம். ஏ. வரலாறு
  • எம். காம்.
  • எம். எஸ்சி. வேதியியல்
  • எம். எஸ்சி. கணிதம்
  • எம். எஸ்சி. கணினி அறிவியல்

ஆராய்ச்சி பட்டம்[தொகு]

எம். பில்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • வணிகவியல்
  • வேதியியல்

முனைவர் பட்டம்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • வணிகவியல்
  • வேதியியல்

அமைவிடம்[தொகு]

இக்கல்லூரி செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலமையூர் கிராமத்தில் அமைந்துள்ளது. செங்கல்பட்டு தொடருந்து நிலையத்திலிருந்தும் பேருந்து நிலையத்திலிருந்தும் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அருகிள் ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ளது. செங்கல்பட்டு தாம்பரத்திலிருந்து 30 கி.மீ. தொலைவிலும், சென்னை விமான நிலையத்திலிருந்து 45 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]