இராசிபுரம் நித்தியசுமங்கலி மாரியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நித்தியசுமங்கலி மாரியம்மன் கோயில் என்பது தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இராசிபுரத்தில் அமைந்துள்ள ஒரு மாரியம்மன் கோயிலாகும்.[1][2][3]

நித்திய கல்யாணி[தொகு]

பொதுவாக மாாியம்மன் அவதாித்துள்ள எல்லா ஆலயங்களிலும் திருவிழா துவங்கும் முன் கம்பம் நடப்படுவதும், விழா முடிந்ததும் நீர்நிலைகளில் அதை விடுவதும் வழக்கம். அவ்வாறு கம்பம் நடப்படும் போது அதை அம்மனின் கணவராக உருவகித்து அம்மனுக்கு மாங்கல்யம் சூட்டப்படும். திருவிழா முடிந்து கம்பம் எடுக்கும் பொழுது அம்மனுக்கு மாங்கல்யம் நீக்கி விதவையாக்கப்படும். இக்கோயிலில் ஆண்டு முழுவதும் கம்பம் எடுக்கப்படாமல் கோயிலிலேயே இருக்கும்.

ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் திருவிழா நடைபெறும் பொழுது திருவிழா துவங்கும் முன் கம்பம் நீக்கப்பட்டு புதிதாக நடப்படும். இதனால் ஆண்டு முழுவதும் மாாியம்மன் சுமங்கலியாக காட்சி தருவதால் இவ்வம்மனுக்கு நித்ய கல்யாணி என்றும், நித்திய சுமங்கலி என்றும் திருநாமம் வழங்கப்படுகிறது.

விழாக்கள்[தொகு]

ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் திருவிழா நடைபெறுகிறது.[4][5][6] அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கெண்டு அக்னிக்குண்டம் (தீமிதி திருவிழா) இறங்குவது திருவிழாவின் சிறப்பாகும். மேலும் அமாவாசை, பெளர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

கோயில் அமைப்பு[தொகு]

நித்திய சுமங்கலி மாாியம்மன் திருக்கோயில் ஐந்து நிலைகளையுடைய இராஜகோபுரம் உள்ளது. இந்த இராஜ கோபுரமானது வடக்கு நோக்கியவாறும் உள்ளது. கோயிலில் உள்ள மூலவரான நித்திய சுமங்கலி மாாியம்மன் கிழக்கு நோக்கியவாறு அமைந்திருக்கின்றார். மேலும் விநாயகப் பெருமான், முருகப் பெருமான் ஆகியோருக்கு தனித்தனிச் சன்னதிகள் உள்ளன. இக்கோயிலின் தல விருட்சமாக வேம்பு உள்ளது

மேற்கோள்கள்[தொகு]

  1. "ராசிபுரம் நித்தியசுமங்கலி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2023/jan/22/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-3987999.html. பார்த்த நாள்: 24 May 2023. 
  2. மலர், மாலை (2022-07-29). "ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-24.
  3. "ராசிபுரம் நித்தியசுமங்கலி மாரியம்மன்: `1 டன் பூக்கள் கொண்டு அலங்காரம்'- திரளாகப் பங்கேற்ற பக்தர்கள்". https://www.vikatan.com/. 20 அக்., 2022. {{cite web}}: Check date values in: |date= (help); External link in |website= (help)
  4. "ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் ஐப்பசி தேர் திருவிழா தொடங்கியது..!". News18 Tamil. 2022-10-19. பார்க்கப்பட்ட நாள் 2023-05-24.
  5. தினத்தந்தி (2022-11-04). "நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் திருவிழா". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-24.
  6. "நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் விழா கோலாகலம்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 2023-05-24.