இராசாம்பாள் பா. தேவதாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராசாம்பாள் பா. தேவதாசு
பிறப்புஇராசாம்பாள் பாக்கியநாதன் தேவதாசு
(1919-04-07)7 ஏப்ரல் 1919
தெற்கு.கள்ளிகுளம், திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு17 மார்ச்சு 2002(2002-03-17) (அகவை 82)
பணிஊட்டச்சத்துவியலார்
கல்வியாளர்
அறியப்படுவதுஅவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் பெண்களுக்கான உயர் கல்வி நிறுவனம்
பெற்றோர்பாக்யநாதன்
சொர்ணாம்பாள்
வாழ்க்கைத்
துணை
எட்வர்டு தேவதாசு
பிள்ளைகள்1
விருதுகள்பத்மஸ்ரீ
ஜம்னாலால் பஜாஜ் விருது

இராசாம்மள் பாக்கியநாதன் தேவதாசு (Rajammal Packiyanathan Devadas) (7 ஏப்ரல் 1919 - 17 மார்ச் 2002) என்பார் இந்திய ஊட்டச்சத்து நிபுணர், கல்வியாளர் மற்றும் அவிநாசிலிங்கம் நிகர் நிலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆவார்.[1] இவர் தமிழகத்தின் மாநில திட்ட ஆணையம், தமிழக மகளிர் ஆணையம் மற்றும் உலக உணவு மாநாட்டின் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். 1992ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்குப் பத்மஸ்ரீ விருதினை வழங்கியது.[2]

சுயசரிதை[தொகு]

இராசாம்பாள் பாக்கியநாதன், 1919ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் நாள் தெற்கு இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் [தெற்கு.கள்ளிகுளம்],இராதாபுரம் வட்டம்) திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய தந்தை முத்தையா பாக்யநாதன் யாதவ், தாயார் சொர்ணாம்பாள். இவரது கணவர் எட்வர்ட் தேவதாஸ் கோன். சென்னை இராணி மேரிக் கல்லூரியில் இளநிலை அறிவியல் பட்டமும் (1944) 1948ல் முதுநிலை அறிவியல் பட்டமும் பின்னர் 1949ல் கலைப்பிரிவில் முதுகலைப் பட்டமும், ஓகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் (1950) பெற்றார். இவர் அவிநாசிலிங்கம் மனையியல் கல்லூரியில் சேர்ந்தார். 1988 முதல் 1994 வரை இந்த நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், 1994 முதல் 17 மார்ச் 2002 அன்று இறக்கும் வரை அதன் அதிபராகவும் நிர்வாக அறங்காவலராகவும் பணியாற்றினார்.[சான்று தேவை]

இராசாம்மள் ஊட்டச்சத்து மற்றும் கல்வி என்ற தலைப்புகளில் பல புத்தகங்களையும் கட்டுரைகளையும்[3] வெளியிட்டுள்ளார்.[4][5] இவர் தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார் குறித்த புத்தகத்தின் ஆசிரியராவார்.[6] இவர் தேசிய மாணவர் படை (இந்தியா) தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பிரிவின் கெளரவ கலோனலாகவும், காந்திகிராம், கிராம சுகாதார மற்றும் குடும்ப திட்டமிடல் நிறுவனம், தேசிய எழுத்தறிவு பணி, சிக்மா ஜி, சிக்மா டெல்டா எப்சிலன், ஓமிக்ரான் நு மற்றும் ஃபை அப்ஸிலோன் ஓமிக்ரான் ஆகிய அமைப்புகளின் உறுப்பினராகச் செயல்பட்டுள்ளார்.  இவர் 1987 முதல் 1991 வரை இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் தலைவராக பணியாற்றினார்.[7]

விருதுகள் மற்றும் கெளரவங்கள்[தொகு]

 • சென்னைப் பல்கலைக்கழகம், ஓரிகான் மாநில பல்கலைக்கழகம், சந்திர சேகர் ஆசாத் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஓஹியோ மாநில பல்கலைக்கழகம் மற்றும் உல்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் முனைவர் வழங்கியுள்ளது (மரியாதை நிமித்தமாக).[சான்று தேவை]
 • 1992ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கியது [2]
 • 1998ல் ஜம்னாலால் பஜாஜ் விருதைப் பெற்றார்.
 • வியன்னா ஆஸ்திரியா 2001ல் 17வது கூட்டத்தில் சர்வதேச ஊட்டச்சத்து அறிவியல் ஒன்றியம் (ஐயூஎன்எஸ்) இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.[8]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Chancellors". Avinashilingam Institute for Home Science and Higher Education for Women. 2015. Archived from the original on 2 October 2011. பார்க்கப்பட்ட நாள் 17 October 2015.
 2. 2.0 2.1 "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
 3. Rajammal Packiyanathan Devadas (1949). "Analyses of South Indian Food Preparations". Ind Jour Med Res 37 (1): 19–28. http://ijmr.in/CurrentTopicView.aspx?year=Ind%20Jour%20Med%20Res,%2037,%201%20January,%201949%20pp%2019-28$Original%20Article. பார்த்த நாள்: 2020-12-10. 
 4. "Rajammal P. Devadas 1919-2002". WorldCat. 2015. பார்க்கப்பட்ட நாள் 17 October 2015.
 5. "Library of Congress profile". Library of Congress. 2015. பார்க்கப்பட்ட நாள் 17 October 2015.
 6. Rajammal P Devadas (1993). Ayya Dr. T.S. Avinashilingam : saga of dedicated life and service. Avinashilingam Education Trust. p. 352. இணையக் கணினி நூலக மைய எண் 35222909.
 7. "Nutrition Society of India presidents". Nutrition Society of India. 2015. பார்க்கப்பட்ட நாள் 17 October 2015.
 8. "Dr. Smt. Rajammal P. Devadas". Jamnalal Bajaj Foundation. 2015. Archived from the original on 8 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 5 December 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

 • Rajammal P. Devadas in libraries (WorldCat catalog)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசாம்பாள்_பா._தேவதாசு&oldid=3927789" இலிருந்து மீள்விக்கப்பட்டது