உள்ளடக்கத்துக்குச் செல்

இராசலட்சுமி செந்தில் கணேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராசலட்சுமி செந்தில் கணேசு(Rajalakshmi Senthil Ganesh) இந்தியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராமிய இசைக்கலைஞர் ஆவார். இவர் "சின்ன மச்சான்" என்ற பிரபலமான பாடலைப் பாடியதற்காக பரவலாக அறியப்படுகிறார்.

படிப்பு

[தொகு]

இராசலட்சுமி தமிழில் முதுகலைப் பட்டம் மற்றும் எம்.பில். (தத்துவத்தில் முதுகலைப் பட்டம்) பெற்றுள்ளார்.

குடும்பம்

[தொகு]

இராசலட்சுமி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை பெயர் செகநாதன்.இவர் பிரபலமான நாட்டுப்புறப் பாடகர் செந்தில் கணேசு அவர்களின் மனைவி ஆவார். இருவரும் இணைந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர். இருவரும் முதலில் ஒரே மேடையில் பாடல் பாடியுள்ளார்கள். இவர்கள் 2012 ம் ஆண்டு மே 23 அன்று திருமணம் செய்து கொண்டனர்.[1] இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளளனர்.

கலை சார்ந்த சிறப்புகள்

[தொகு]

பிரபல நடிகர் பிரபு தேவா நடித்த சார்லி சாப்ளின் 2 படத்திற்காக சின்ன மச்சான் என்ற நாட்டுப்புற பாடலைப் பாடியதன் மூலம் மிகவும் பிரபலமானார்.[2] இராசலட்சுமி, செந்தில் கணேஷுடன் இணைந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சூப்பர் சிங்கர்" நிகழ்ச்சியில் பங்கேற்றார்.[3] அதில் செந்தில் கணேசு வெற்றியாளராகவும், இராசலட்சுமி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். இருவரும் இணைந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். இராசலட்சுமி மற்றும் செந்தில் கணேசு இருவரும் இணைந்து பல மேடை நிகழ்ச்சிகளில் நாட்டுப்புறப் பாடல்களை பாடி வருகின்றனர். இருவரும் இணைந்து பல இசைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர். ஒரு நாட்டுப்புற இசைக்கலைஞராக, கடந்த பல ஆண்டுகளில் இந்தியா, கனடா, பிரான்சு மற்றும் தென்னாப்பிரிக்காவில் ஏராளமான நிகழ்வுகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

திரைப்பட நடிப்பு

[தொகு]

2023 ஆம் ஆண்டு இவர் நடித்த லைசென்ஸ் (திரைப்படம்) தமிழ் திரைப்படம் வெளியானது. இது பெண்களை மையமாகக் கொண்ட, சமூக விழிப்புணர்வு திரைப்படமாகும்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]