இராசராசேசுவர நாடகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராசராசேசுவர நாடகம் சோழ மன்னனாகிய இராசராசன் மீது இயற்றப்பட்ட நாடக வகையைச் சேர்ந்த காப்பியமாகும்.

இராசராசனின் வாழ்க்கை வரலாறு, ஆட்சிச் சிறப்பு, சோழ நாட்டு வளம், அவனது வீரம், ஆட்சிச் சிறப்பு, நீதி பரிபாலனம் என்பவற்றோடு பல அருஞ்செயல்களையும் பற்றிக் கூறுகின்றது. இந்நாடகத்தை விசேடமான காலங்களில் இராசராசன் கட்டுவித்த தஞ்சைப் பரிகதீசுவரர் கோவிலில் நடித்துக் காட்டினர் என்றும், அவ்வாறு நடிப்பதற்குத் தேவையான நிவந்தங்களை முதலாம் இராசேந்திரன் வழங்கினான் என்றும் இராசேந்திரனது கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இந்நாடகத்தின் ஆசிரியர் பெயர் முதலான வரலாறுகள் எவையும் கிடைத்தில.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. எஸ்.வையாபுரிப்பிள்ளை. (1962). தமிழிலக்கிய சரித்திரத்தில் காவியகாலம் (பக். 230). சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசராசேசுவர_நாடகம்&oldid=691620" இலிருந்து மீள்விக்கப்பட்டது