இராசசேகர் (சமசுகிருதக் கவிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராசசேகர்
பணிகவிஞர், நாடக ஆசிரியர், விமர்சகர்
வாழ்க்கைத்
துணை
அவந்திசுந்தரி

இராசசேகர் (Rajashekhara;  10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த [1] ) சமசுகிருதக் கவிஞரும், நாடக ஆசிரியரும், விமர்சகரும் ஆவார். இவர் கூர்ஜர-பிரதிகாரர்களின் அரசவைக் கவிஞராக இருந்தார்.[2]

பொ.ஊ. 880 மற்றும் 920 க்கு இடையில் இராஜசேகர் "காவ்யமிமாம்சம்" என்ற கவிதைத் தொகுப்பினை எழுதினார். ஒரு நல்ல கவிதையின் கூறுகள் மற்றும் கலவையை விளக்கும் கவிஞர்களுக்கு இந்த படைப்பு ஒரு நடைமுறை வழிகாட்டியாகும். மேலும், மகாராட்டிரி பிராகிருதத்தில் எழுதப்பட்ட "கற்பூரமஞ்சரி" என்ற நாடகத்திற்காகவும் இவர் மிகவும் பிரபலமானவர். [3] ரசனையும் சாதனையும் உள்ள ஒரு பெண்ணான அவந்திசுந்தரியை மகிழ்விக்க இவர் நாடகத்தை எழுதினார். ஒரு பெண் தனது இலக்கிய வாழ்க்கையில் செய்த பங்களிப்பிற்காக ஒப்புக்கொண்ட ஒரே பண்டைய இந்தியக் கவிஞர் இவராவார். [4]

வாழ்க்கை[தொகு]

இவரது "பாலராமாயணம்" மற்றும் "காவ்யமிமாம்சத்தில்", இராசசேகர் தனது குடும்பப் பெயராக "யாயவரா" அல்லது "யாயவாரியா" என்று தன்னைக் குறிப்பிடுகிறார். பாலராமாயணத்தில், தனது பெரியப்பா அகலஜலதா மகாராட்டிரத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடுகிறார். அதே வேலையில், இவர் தனது தந்தை துர்துகாவை ஒரு 'மகாமந்திரி' என்று விவரிக்கிறார். தனது மனைவி அவந்திசுந்தரி சகமான ( சௌகான் ) குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தனது படைப்புகளில் குறிப்பிட்டுள்ளார். இவரது படைப்புகளில், இவர் தன்னை கூர்ஜர-பிரதிகார மன்னர் முதலாம் மகேந்திரபாலனின் ஆசிரியர் என்று விவரித்தார். [5]

படைப்புகள்[தொகு]

கவிஞர் இராசசேகர் எழுதியதாக கூறப்பட்ட படைப்புகள்:

 • வித்தசாலபஞ்சிகை
 • பாலபாரதம்[6]
 • கர்பூரமஞ்சரி
 • பாலராமாயணம்[7]
 • காவ்யமீமாம்சம்[8][9]

சான்றுகள்[தொகு]

 1. Sisir Kumar Das, Sahitya Akademi (2006). A history of Indian literature, 500-1399: from courtly to the popular. Sahitya Akademi. பக். 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788126021710. https://books.google.com/books?id=BC3l1AbPM8sC&q=Karpura-Manjari&pg=PA60. 
 2. Chandra (1978). Medieval India: a textbook for classes XI-XII, Part 1. National Council of Educational Research and Training (India). பக். 10. https://books.google.com/books?id=tHVDAAAAYAAJ&q=rajshekhar+pratihara. 
 3. The Indian Autobiographies in English. 28 February 2013. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781481784948. https://books.google.com/books?id=_U4fnGfsZT8C&dq=Karpuramanjari+maharashtri&pg=PA21. 
 4. A history of Indian literature, 500-1399: from courtly to the popular. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788126021710. https://books.google.com/books?id=BC3l1AbPM8sC&q=Karpura-Manjari&pg=PA60. Sisir Kumar Das, Sahitya Akademi (2006). A history of Indian literature, 500-1399: from courtly to the popular. Sahitya Akademi. p. 60. ISBN 9788126021710.
 5. Warder, A. K. (1988). Indian Kāvya Literature. V. Delhi: Motilal Banarsidass. பக். 413–414. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-208-0450-3. https://books.google.com/books?id=kKD-v7tPc8EC&q=Rajasekhara+son+of+Durduka&pg=PA413. 
 6. Rama Shankar Tripathi (1989). History of Kanauj: To the Moslem Conquest. Motilal Banarsidass Publ.. பக். 224. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-0404-3. https://books.google.com/books?id=2Tnh2QjGhMQC&pg=PA224. 
 7. Rajasekhara (1884). Jivanand Vidyasagara. ed (in sa). Balaramayana, a drama by Rajasekhara. Calcutta. https://archive.org/details/balaramayanarajashekaracommentaryofjivanandvidyasagar1884_116_i/mode/2up. பார்த்த நாள்: 23 June 2020. 
 8. Rājaśekhara (2013). Kāvyamīmāṁsā of Rājaśekhara : original text in Sanskrit and translation with explanatory notes. Edited and translated by Sadhana Parashar. New Delhi: D.K. Printworld. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-246-0140-2. இணையக் கணினி நூலக மையம்:857550708. https://www.worldcat.org/oclc/857550708. 
 9. Rajasekhara (1924). Kavyamimamsa (3rd ). Baroda: Oriental Institute. http://archive.org/details/in.ernet.dli.2015.495861.