இராகேஷ் பக்சி
இராகேஷ் பக்சி | |
|---|---|
| பிறப்பு | 4 சூன் 1958 லண்டன், இங்கிலாந்து |
| இறப்பு | 13 ஏப்ரல் 2020 (அகவை 61) டெல்லி, இந்தியா |
| படித்த கல்வி நிறுவனங்கள் | தேசிய தொழில்நுட்பக் கழகம், குருச்சேத்திரம் |
| பணி | தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், ஆர்ஆர்பி எனர்ஜி நிறுவனம்]] |
| வாழ்க்கைத் துணை | சீமா பக்சி (அக்டோபர் 2017-இல் காலமானார்) |
| பிள்ளைகள் | சுவேதாம்பரி பக்சி, இரிதீஷ் மோகன் பக்சி & ராகவ் மோகன் பக்சி |
இராகேஷ் பக்சி (Rakesh Bakshi) (4 ஜூன் 1958 - 13 ஏப்ரல் 2020) ஓர் இந்தியப் பருவநிலை மாற்ற ஆர்வலர், பேராசிரியர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இவர் சோல்க்ரோம் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆர்ஆர்பி எனர்ஜி லிமிடெட் ஆகிய நிறுவனங்களை நிறுவினார்.[1] புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக, 1991-ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது உயரிய குடிமை விருதான பத்மசிறீ விருது, அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டது.[2] புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் பணியாற்றியதற்காக இவ்விருதைப் பெற்ற முதல் இந்தியர் இவராவார்.[3]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]இராகேஷ் பக்சி 1958-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி இலண்டனில் பிறந்தார்.[4] இவர் குருச்சேத்திரத்தில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் பட்டம் பெற்றார்; மேலும் கணினி அறிவியல் மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் ஆகிய துறைகளில் முதுகலைத் தகுதிகளையும் பெற்றார். படிப்பை முடித்த பிறகு, புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்களுக்கான ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் செயல்படுத்தல் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களை நிறுவினார். இவர் சிறிது காலம் ஐஐடி-யில் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ராகேஷ் பக்ஷி, இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் மற்றும் புகழ்பெற்ற குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்த பிரிகேடியர் டாக்டர் கபில் மோகனின் (மோகன் மீக்கின் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்) மகளான சீமா என்பவரை மணந்தார். சீமா 2017 அக்டோபர் 11 அன்று சென்னையில் காலமானார். இவர்களுக்கு சுவேதாம்பரி பக்சி (மகள்), இரிதீஷ் மோகன் பக்சி (மகன்) மற்றும் இராகவ் மோகன் பக்சி (மகன்) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். (மகன்) மற்றும் இராகவ் மோகன் பக்சி (மகன்) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "On Rakesh Bakshi". Economic Times. Archived from the original on 16 October 2015. Retrieved 22 October 2015.
- ↑ Bakshl, R. (2002). "Wind energy-the Indian scenario". 2002 IEEE Power Engineering Society Winter Meeting. Conference Proceedings (Cat. No.02CH37309). Vol. 1. pp. 344–345. doi:10.1109/PESW.2002.985012. ISBN 0-7803-7322-7. S2CID 111032216.
- ↑ Mallon, Karl (2012-06-25). Contributions summary. Routledge. ISBN 9781136558603. Retrieved 22 October 2015.
{{cite book}}:|work=ignored (help) - ↑ "Early life brief". AIHIT data. Retrieved 22 October 2015.