இராகினி தேவி
இராகினி தேவி | |
|---|---|
| பிறப்பு | எஸ்தர் லூயெல்லா செர்மன் 18 ஆகத்து 1893 பொடேஸ்கி, மிக்சிகன் |
| இறப்பு | 23 சனவரி 1982 (அகவை 88) எங்கிள்வூட்[1] |
| பணி | இந்தியப் பாரம்பரிய நடனக் கலைஞர், நடன இயக்குநர் |
| வாழ்க்கைத் துணை | இராம்லால் பல்ராம் பாஜ்பாய் (தி. 1921; இற. 1962) |
| பிள்ளைகள் | இந்திராணி ரகுமான் |
| உறவினர்கள் | அபீப் இரகுமான் |
இராகினி தேவி (Ragini Devi) என்று நன்கு அறியப்பட்ட எஸ்தர் லூயெல்லா செர்மன் (Esther Luella Sherman) (18 ஆகஸ்ட் 1893-23 ஜனவரி 1982) ஓர் இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். இவர் பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி மற்றும் ஒடிசி ஆகிய நடன வகைகளை மேற்கத்திய நாடுகளில் பிரபலமடையச் செய்தார்.
ஆரம்பகால வாழ்க்கை.
[தொகு]இராகினி தேவி 1893 ஆம் ஆண்டில் மிச்சிகன் ஏரி நகரமான பெட்டோஸ்கியில் பிறந்தார்.[2] புலம்பெயர்ந்த தையல்காரரான இவரது தந்தை அலெக்சாண்டர் ஓட்டோ செர்மன், தாயார் இடா பெல் பார்க்கர் செர்மன் ஆகிய இருவரும் கனடிய-ஜெர்மன் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். எஸ்தர் பிறந்த உடனேயே, குடும்பம் மினசோட்டாவின் மினியாபோலிஸுக்கு குடிபெயர்ந்தது. அங்கு எஸ்தர் தனது ஆரம்ப ஆண்டுகளை கழித்தார். இவரும் இளைய சகோதரர் டிவிட்டும் மினசோட்டாவிலுள்ள ஹாரியட் ஏரி அருகிலுள்ள ஒரு வீட்டில் வளர்ந்தனர்.[3]
தொழில் வாழ்க்கை
[தொகு]எஸ்தர் ஒரு உள்ளூர் உருசிய நடன ஆசிரியரிடமிருந்து முறையான நடனத்தைக் கற்றுக் கொண்டார். "ரீட்டா காசிலாஸ்" மற்றும் "டோடி ராகினி" என்ற மேடைப் பெயர்களைப் பயன்படுத்தி எஸ்தர் உருசிய நாட்டுப்புற நடனங்கள் மற்றும் சுய பாணியிலான கிரேக்க மற்றும் எகிப்திய கருப்பொருள் நடனக்களை நிகழ்த்தினார். அதே நேரத்தில் மினசோட்டா பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தையும் படித்தார்.[4]
1922 ஆம் ஆண்டில் தனது கணவர் பாஜ்பாயுடன் நியூயார்க்கிற்கு குடிபெயர்ந்தார். நியூயார்க்கில், இவர் பேசாப் படங்களில் சில வேடங்களில் நடித்து வந்தார். 1922 ஏப்ரல் 28 அன்று மன்ஹாட்டனின் கிரீன்விச் கிராமத் திரையரங்கில் "உண்மையான இந்திய பொழுதுபோக்குகள்" என்ற ஒரு தனி நிகழ்ச்சியில் "இராகினி தேவி" என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். [5] அப்போதிருந்து, இவர் மேடையில் மற்றும் வெளியே, இராகினி தேவி என்று அறியப்பட்டார்.[4]
1922 மற்றும் 1930 க்கு இடையில், இவரது நடன பாணிகள் அமெரிக்க நடன விமர்சகர்களிடையேப் பாராட்டுக்களைப் பெற்றன. 1928 ஆம் ஆண்டில், "நிருதஞ்சலி: இந்து நடனத்திற்கான ஒரு அறிமுகம்" என்ற புத்தகத்தை வெளியிட்டார். இது அமெரிக்காவில் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. 1930 ஆம் ஆண்டில், இந்தியாவுக்கு வந்தார்.
தேவி இந்திய நடனத்தை கற்க ஆர்வமாக இருந்தார். சென்னையில் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலின் முன்னாள் தேவதாசி மைலாப்பூர் கௌரி அம்மாளிடம் பரதநாட்டியம் படித்தார்.[6][7] இவருக்கு கலை விழாவில் நடனமாட திருவிதாங்கூர் மகாராஜாவிடமிருந்து அழைப்பு வந்து கேரளா சென்றார். வள்ளத்தோள் நாராயண மேனனை சந்திக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. புகழ்பெற்ற கேரள கலாமண்டலத்தில் கதகளி படித்த முதல் பெண்மணி இவர்தான்.[8] இங்குதான் திருவிதாங்கூரைச் சேர்ந்த இளம் மற்றும் அழகான கதகளி நடனக் கலைஞரான கோபிநாத்தை சந்தித்தார். அவர் இவரது சுற்றுப்பயணங்களில் நடன கூட்டாளியாக இருக்க ஒப்புக்கொண்டார்.[9] நடனங்களின் நீளத்தை குறைத்து, ஆடைகளை நெறிப்படுத்தி, கதகளியை மாலை பொழுதுபோக்காக மாற்றியதன் மூலம் ராகினி தேவி மற்றும் கோபிநாத் முக்கியத்துவம் பெற்றனர். 1933 முதல் 1936 வரை இவர்கள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கதகளி "நடன நாடகங்களை" பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இந்தியாவின் நாக்பூரைச் சேர்ந்த இளம் விஞ்ஞானியும், இந்திய சுதந்திரத்திற்கான ஆர்வலருமான இராம்லால் பல்ராம் பாஜ்பாயை எஸ்தர் சந்தித்தார்.[10] 1921 ஆம் ஆண்டில், தனது பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக, எஸ்தர் செர்மன் பாஜ்பாயை மணந்தார். எஸ்தர் தனது திருமணத்திற்குப் பிறகு இந்து மதத்தைத் தழுவினார்.[11] விக்டோரியா மகாராணியின் பொதுச் சிலையை சேதப்படுத்தியதாக பாஜ்பாய் ஆங்கிலேயர்களால் தேடப்பட்டு வந்தவர். தான் பிடிபடுவதைத் தவிர்க்க அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார். அங்கு 1916 இல் மினசோட்டா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இந்திய விடுதலைக்குப் பிறகு நியூயார்க்கில் இந்தோ-அமெரிக்கச் சபைக்கு சிறிது காலம் தலைவராக இருந்தார்.
பின்னர், இவர்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர். இவர்களின் மகள் இந்திராணி 1930 செப்டம்பர் 19 அன்று சென்னையில் பிறந்தார்.[12] இந்திராணியும் பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி மற்றும் ஒடிசி நடனங்களை கற்றுக்கொண்டார். இந்திராணி 1952 இல் மிஸ் இந்தியா பட்டம் வென்றார். மேலும், தனது 15 வயதில், 1945 இல் வங்காள-முஸ்லீம் கட்டிடக் கலைஞரான அபீப் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கலைஞர் இராம் ரகுமான் என்ற மகனும், சுகன்யா இரகுமான் என்ற மகளும் இருந்தனர்.[12]
இறப்பு
[தொகு]நியூ ஜெர்சியில் உள்ள எங்கிள்வூட்டில் உள்ள நடிகர்கள் இல்லத்தில் தங்கியிருந்த இராகினி தேவி ஜனவரி 22,1982 அன்று பக்கவாதத்தால் இறந்தார்.[13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Anna Kisselgoff (26 January 1982). "RAGINI DEVI DIES; DANCER WAS 86". த நியூயார்க் டைம்ஸ். p. 10. Retrieved 1 April 2021.
- ↑ Susan Ware; Stacy Lorraine Braukman (2004). Notable American Women: A Biographical Dictionary Completing the Twentieth Century. Harvard University Press. pp. 172–173. ISBN 978-06-740-1488-6.
{{cite book}}:|work=ignored (help) - ↑ Rachel Mattson. "Devi, Ragini (née Esther Luella Sherman)" (PDF). Retrieved 1 April 2021.
- ↑ 4.0 4.1 Rachel Mattson. "Devi, Ragini (née Esther Luella Sherman)" (PDF). Retrieved 1 April 2021.Rachel Mattson.
- ↑ Akhila Krishnamurthy (26 December 2019). "The Inheritance of Dance". இந்தியா டுடே. Retrieved 2 April 2021.
- ↑ Leela Venkataraman (28 October 2001). "Rhythm of the new millennium". தி இந்து. Archived from the original on 11 February 2003.
- ↑ Arundhati Subramaniam (22 September 2002). "Dancing through their lives". The Hindu. Archived from the original on 7 November 2012.
- ↑ Sunil Kothari (15 October 2019). "Ragini Devi: The first American female dancer in the male bastion of Kathakali". The Asian Age. Retrieved 2 April 2021.
- ↑ Tapati Chowdurie (1 July 2019). "Celebrating their indomitable spirit". The Statesman. https://www.thestatesman.com/supplements/8thday/celebrating-their-indomitable-spirit-1502772334.html.
- ↑ Anjana Basu (4 March 2002). "Dancing in the Family Book Review". South Asian Women Forum. Archived from the original on 12 April 2003.
- ↑ Kuldip Singh (18 February 1999). "Obituary: Indrani Rehman".
- ↑ 12.0 12.1 "Remembering Indrani". Sukanya Rahman. 24 September 2009. Retrieved 1 April 2021.
- ↑ Sunil Kothari (15 October 2019). "Ragini Devi: The first American female dancer in the male bastion of Kathakali". The Asian Age. Retrieved 2 April 2021.Sunil Kothari (15 October 2019).
மேலும் வாசிக்க
[தொகு]- Nritanjali: an introduction to Hindu dancing, by Sri Ragini Devi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-906-7243-6
- Dancing in the Family: An Unconventional Memoir of Three Women, by Sukanya Rahman. 2001, HarperCollins India, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-722-3438-4.
- Dance dialects of India, by Ragini Devi. Motilal Banarsidass Publ., 1990. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0674-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0674-0.
- Dancing in the Family: The Extraordinary Story of the First Family of Indian Classical Dance by Sukanya Rahman. 2019, Speaking Tiger Publishing Pvt. Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 93-888-7469-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-888-7469-4
- Some Dancers of India by Susheela Misra. 1992, Harman Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-851-5158-8
- Dance of India in USA, 1906-1970 by Marianne Elizabeth Jirgal Fainstadt's. 1970, UCLA
- The Seductions of Dissonance: Ragini Devi and the Idea of India in the U.S., 1893-1965 by Rachel Mattson