இராகினி சிங்
இராகிணி சிங் | |
|---|---|
| ஜார்க்கண்டின் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2024 | |
| முன்னையவர் | பூர்ணிமா நீரஜ் சிங் |
| தொகுதி | ஜரியா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 23 சனவரி 1981 |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| துணைவர்(கள்) | இராஜீவ் சூர்யதியோ சிங் (இற. 2003) சஞ்சீவ் சூர்யதியோ சிங் |
| உறவினர் | சூர்யதியோ சிங் (மாமனார்) |
இராகிணி சஞ்சீவ் சிங் ( Ragini Sanjeev Singh) (பிறப்பு 1981) சார்க்கண்டைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் தன்பாத் மாவட்டத்தில் உள்ள ஜரியா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார். இவர் 2024-ஆம் ஆண்டு சார்க்கண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்றார்.[2]
தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் உள்ள ஜாரியா சேர்ந்தவர் இராகினி. இவர் ஒரு அரசியல்வாதியான சஞ்சீவ் சிங் என்பவரை மணந்தார், இவரது மாமனார் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சூர்யதியோ சிங் ஆவார்.[1]
தொழில் வாழ்க்கை
[தொகு]இராகினி 2024 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜாரியா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் 87,892 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான இந்திய தேசிய காங்கிரஸின் பூர்ணிமா நீரஜ் சிங்கை 14,511 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3][4] முன்னதாக 2019 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில், இவர் தனது மைத்துனி இந்திய தேசிய காங்கிரஸின் பூர்ணிமா நீரஜ் சிங்கிடம் 12,054 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இராகினி பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு 67,732 வாக்குகளைப் பெற்றார், பூர்ணிமா 79,786 வாக்குகளைப் பெற்றார்.[3][5][6]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Ragini Singh(Bharatiya Janata Party(BJP)):Constituency- JHARIA(DHANBAD ) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2024-11-25.
- ↑ "Jharia, Jharkhand Assembly Election Results 2024 Highlights: BJP's Ragini Singh defeats INC's Purnima Niraj Singh with 14511 votes". India Today (in ஆங்கிலம்). 2024-11-23. Retrieved 2024-11-25.
- 1 2 "Jharia Election Result 2024 LIVE: Ragini Singh of BJP Wins". News18 (in ஆங்கிலம்). Retrieved 2024-11-25.
- ↑ "Jharia (Jharkhand) Assembly Election Results 2024 Live: Winner, Runner-up, Candidates List". The Indian Express (in ஆங்கிலம்). 2024-11-23. Retrieved 2024-11-25.
- ↑ "Jharkhand Election Winners List 2024: Here is the full list victorious candidates in the state". https://economictimes.indiatimes.com/news/elections/assembly-elections/jharkhand/jharkhand-election-winners-list-2024-check-full-winning-candidates-list-constituency-wise/articleshow/115585344.cms?from=mdr.
- ↑ "Jharia Constituency Election Results 2024: Jharia Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2024-11-25.