உள்ளடக்கத்துக்குச் செல்

இராகினி உபாத்யாயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராகினி உபாத்யாயா
रागिनी उपाध्याय
தாய்மொழியில் பெயர்रागिनी उपाध्याय
பிறப்பு9 நவம்பர் 1959 (1959-11-09) (அகவை 66)
காட்மாண்டு, நேபாளம்
தேசியம்நேபாளி
மற்ற பெயர்கள்இராகினி உபாத்யாயா கிரேலா
கல்விநுண்கலையில் இளங்கலைப் பட்டம்
படித்த கல்வி நிறுவனங்கள்இலக்னோ கலைக் கல்லூரி
பணிநுண்கலை, தொண்டுப்பணிகள்
செயற்பாட்டுக்
காலம்
1979–நாளது வரை
அமைப்பு(கள்)நேபாள நுண்கலை அகாதமி
குறிப்பிடத்தக்க படைப்புகள்An Apple in a Pig's Mouth
பட்டம்வேந்தர்
பதவிக்காலம்2014–2018
பெற்றோர்
  • காந்தாபிரசாத் உபாயத்யா (தந்தை)
  • சுசீலா உபாயாத்யா (தாயார்)
வாழ்க்கைத்
துணை
ஆல்பர்ட் கிரேலா
பிள்ளைகள்1
விருதுகள்விரேந்திர-ஐஸ்வர்யா நினைவு பதக்கம் (2002, நேபாளம்)
வலைத்தளம்
Official website

இராகினி உபாத்யாயா கிரேலா (Ragini Upadhyaya Grela) (பிறப்பு 9 நவம்பர் 1959), இராகினி உபாத்யாயா என்று பிரபலமாக அறியப்படும் இவர் நேபாளத்தைச் சேர்ந்த ஓவியரும், பாடலாசிரியரும் மற்றும் பரோபகாரரும் ஆவார்.[1][2][3] இவர் நேபாள நுண்கலை அகாதாமியின் இரண்டாவது வேந்தராகப் பணியாற்றினார். இராகினி தனது அடிமன வெளிப்பாட்டியம் மற்றும் பண்பியல் ஓவியங்களில் பாரம்பரிய தொன்மம், குறியீட்டுவாதம் மற்றும் நவீனத்துவத்தின் இணைவுக்காக அறியப்படுகிறார். இவரது ஓவியர் பெரும்பாலும் சமூக வர்ணனை மற்றும் பெண்ணிய அல்லது தாய்வழி கருப்பொருள்களைக் கொண்டுள்ளது.[4][5][6][7]

சால்வதோர் தாலீ, வின்சென்ட் வான் கோ மற்றும் ஜார்ஜ் சேகல் ஆகியோரின் தாக்கம் இவரது ஓவியங்களில் அடங்கும்.[8]

இராகினி மகளிர் கலைஞர்கள் குழுவின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார். இவரது ஓவியங்கள் உலக வங்கி அருங்காட்சியகம், பிராட்போர்டு அருங்காட்சியகம் (ஐக்கிய இராச்சியம்) புகுயோகா ஆசிய கலை அருங்காட்சியம் (யப்பான்), தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் செயலகம் (நேபாளம்) மற்றும் திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[9] பிபி கொய்ராலா அறக்கட்டளை மற்றும் பார்பரா அமைதி அறக்கட்டளையின் செயற்குழுக்களில் உறுப்பினராக உள்ளார்.[10] மேலும் சிவதா அன்பு அறக்கட்டளையின் தலைவராகவும் உள்ளார். இது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான, குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான கல்வித் திட்டத்தின் மூலம் சமூகப் பணியில் ஈடுபட்ட ஒரு அமைப்பாகும். இந்த அறக்கட்டளை மூளைக் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.[7][11]

தொழில் வாழ்க்கை

[தொகு]

1979 ஆம் ஆண்டில், விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா மற்றும் பால் கிருஷ்ணா சாமா ஆகியோர் இராகினியின் இலாப நோக்கற்ற ஓவியங்களின் கண்காட்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு இவரது பணிக்கு கணிசமான கவனத்தை ஈர்த்தது. மேலும் நேபாளத்தில் முற்போக்கான வட்டங்களில் இவர் நன்கு அறியப்பட்டார்.[8]

1986 ஆம் ஆண்டில் மன்னர் பிரேந்திராவின் பிறந்தநாளில் ராணி ஐஸ்வர்யா ஷா இவரது கண்காட்சியை திறந்து வைத்தபோது இராகினி மேலும் முக்கியத்துவம் பெற்றார். இது இங்கிலாந்தில் படிக்க உதவித்தொகை பெற வழிவகுத்தது.[12]

நேபாளத்தில் நவீன நுண்கலை அருங்காட்சியகத்தை நிறுவும் நோக்கத்தில்,  நேபாளத்தின் பிரதம மந்திரி சுசில் கொய்ராலாவால் நேபாள நுண்கலை அகாதாமியின் முதல் பெண் தலைவராக 2014 இல் நியமிக்கப்பட்டார்.[13][14][15]

தனது தந்தையின் உதவியுடன், இராகினி நுண்கலை துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.[16] 65 க்கும் மேற்பட்ட தனி கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.[17][18]

தொண்டுப் பணிகள்

[தொகு]

இராகினி சிவதா அன்பு அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். மறைந்த மகள் சிவதா உபாத்யாய் கிரேலாவின் நினைவாக இது 2017 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இவரது மகள் பிப்ரவரி 2016 இல் மூளையுறை அழற்சி நோயால் இறந்தார்.[19][20][21]

இந்த அறக்கட்டளை மூளையுறை அழற்சி நோய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், நேபாளத்தில் பின்தங்கிய சிறுமிகளின் கல்வியை உதவித்தொகை மூலம் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.[22]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Olson, Emily (14 May 2020). "A Moment With an Artist". Motif (in ஆங்கிலம்). Retrieved 2020-10-05.
  2. "Artist Ragini in book now". Screen Nepal (in நேபாளி). Retrieved 2020-08-11.
  3. Koirala, Achyut. "Colours of Ragini". Nagarik Daily (in நேபாளி). Retrieved 2020-08-11.
  4. "Art exhibition dedicated to all mothers and daughters of the world". Hangama Today (in நேபாளி). 2019-03-13. Retrieved 2020-08-11.
  5. Mansoor, Hasan (2007-04-08). "KARACHI: Ragini's canvas demands emotional outlets". Dawn (in ஆங்கிலம்). Retrieved 2020-11-03.
  6. Dasgupta, Kurchi (March–April 2014). "The Relentless Critic". Asian Art News. https://www.ragini-art.com/wp-content/uploads/2019/10/Asian-Art-News-PDF-.pdf. 
  7. 7.0 7.1 "LOVE Revisited—Exploring various aspects of love through arts". Annapurna Express (in ஆங்கிலம்). 29 March 2019. Retrieved 2020-10-05.
  8. 8.0 8.1 "Ragini sings through her art". The Express Tribune (in ஆங்கிலம்). 2011-02-24. Retrieved 2020-10-24.
  9. Thapa, Saugat (13 September 2019). "10 Famous Artists of Nepal". ImNepal (in ஆங்கிலம்). Retrieved 2020-10-05.
  10. "Board Members". Embassy of Nepal, New Delhi, India (in ஆங்கிலம்). Retrieved 2020-10-05.
  11. "Making Shivata's dreams come true". myRepublica (in ஆங்கிலம்). 17 February 2020. Retrieved 2020-10-05.
  12. "101 Influencing Ladies". Naari (Women) Magazine (in நேபாளி). Retrieved 2020-08-11.
  13. Niraula, Tirtha (7 June 2018). "Art Struggle not Seen by the Budget". Annapurna Post (in நேபாளி). Retrieved 2020-08-11.
  14. "Ragini Upadhayay". Nepal Academy of Fine Arts. 31 March 2015. Retrieved 2020-11-03.
  15. Grela, Ragini Upadhayay (2019-10-05). "My life journey". Ragini Art & Life (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-11-03.
  16. "Ragini Colour". Annapurna Post Daily (in நேபாளி). Retrieved 2020-08-11.
  17. "Ragini Upadhyay Grela's new exhibition explores love in the modern age". Kathmandupost (in ஆங்கிலம்). Retrieved 2020-10-05.
  18. Khanal, Keshavraj (2020-04-03). "Forgetting the pain, the artists are inflating the creation inside home". Gorkhapatra (in நேபாளி). Retrieved 2020-08-11.
  19. "Artist Ragini's daughter dies". The Himalayan Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-02-08. Retrieved 2020-11-03.
  20. "The Shivata Love Foundation". Shivata Love Foundation (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2020-11-03.
  21. Adhikari, Rojina (2017-07-26). "Art & Soul – Ragini Upadhayay". World of Women (in ஆங்கிலம்). Retrieved 2020-11-03.
  22. "Ragini's philanthropy in memory of daughter". Hungama Today (in நேபாளி). 2019-04-24. Retrieved 2020-08-12.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராகினி_உபாத்யாயா&oldid=4378668" இலிருந்து மீள்விக்கப்பட்டது