இராகவன் (ஈழத்து எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராகவன் ஒரு ஈழத்து எழுத்தாளர். தற்போது எழுதிவரும் இளம்படைப்பாளிகளில் நவீன புனைவில் மிகுந்த கவனம் செலுத்தி வருபவர். மரபுமுறையான கதைசொல்லலையும் வடிவத்தையும் புறக்கணிக்கும் இவரது புனைவுகள் தமிழ்ச்சூழலில் கவனத்திற்குரியன.

வாழ்க்கை வரலாறு[தொகு]

சபாரத்தினம் இராகவன், 1976 இல் பிறந்தார். ‘ஈஸ்வரி வாசம்’, கரவெட்டி கிழக்கு கரவெட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்.

ஆரம்பக்கல்வியை கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயத்திலும், உயர்கல்வியை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் பயின்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொழில் நிர்வாகமாணிப் பட்டத்தினைப் பெற்றவர். தற்போது சமுர்த்தி வங்கி முகாமையாளராக பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பணிபுரிகிறார்.

இலக்கிய ஈடுபாடு[தொகு]

1998 இல் இருந்து எழுதிவருகிறார். கவிதை, கட்டுரை, விமர்சனம், புனைவு, கோட்டோவியம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடுடையவர்.

ஈழத்துப் படைப்பாளிகளுடனும் தீவிர வாசகர்களுடனும் இவர் நேர்காணல்களை நிகழ்த்தியுள்ளார். அவர்களுள் மு.பொ, குந்தவை, சாந்தன், தெணியான், குப்பிழான் ஐ.சண்முகன், து.குலசிங்கம், ஐ.வரதராஜன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

பன்முகம், காலச்சுவடு, சரிநிகர், நிகரி, மூன்றாவது மனிதன், பெருவெளி, அமுது, சௌந்தரசுகன், காலம், உயிர்நிழல், உயிர் எழுத்து,தெரிதல் (இதழ்),புதிய தரிசனம், கலைமுகம் முதலான; தமிழ்ச்சூழலில் வெளிவந்த சிற்றிதழ்களிலும் பத்திரிகைகளிலும் இவரது படைப்புக்கள் வெளிவந்துள்ளன.

விருதுகள்/பரிசுகள்[தொகு]

  • 2002 இல் ஸ்கிறிப்நெற் – சமாதானச்சுருள் (Script Net Reel Peace) வெளியீடாக ‘மூக்குப்பேணி’ (Nose Cup) என்ற குறும்படத்தை சுவடியாக்கம் செய்து இயக்கினார்.
  • 2005 இல் இலண்டன் விம்பம் அமைப்பு சிறந்த திரைச்சுவடியாக்குநருக்கான விருதை ‘மூக்குப்பேணி’ குறும்படத்திற்காக வழங்கியது.
  • 2002 இல் விபவி அமைப்பின் சிறந்த இளஞ்சிறுகதை எழுத்தாளருக்கான விருதைப் பெற்றார்.

இதழியற்பணி[தொகு]

சமுர்த்தி அபிவிருத்தி மன்ற வெளியீடான ‘சுபீட்சம்’ என்ற செய்தி மடலின் ஆசிரியர்.

வெளிவந்த நூல்கள்[தொகு]

  • கலாவல்லி முதலான கதைகள் புது எழுத்து வெளியீடு 2010
  • விட்டில் –சமகால அரசியல் பகுப்பாய்வு காலச்சுவடு வெளியீடு மே 2011

தொகுப்பில் வெளிவந்த கதைகள்[தொகு]

  • மண்ணின் மலர்கள் – ‘வானதியின் கணவன்’ மல்லிகைப் பந்தல் வெளியீடு, 2001
  • இங்கிருந்து 'மாறிப்போன அடையாளங்கள்' நண்பர்கள் வட்டம் யாழ்ப்பாணம் 2002
  • புதிய சலனங்கள் 'கலாவல்லி முதலான கதைகள்' –காலச்சுவடு வெளியீடு 2004

வெளியிணைப்பு[தொகு]