இராகம் (வானொலி அலைவரிசை)
தோற்றம்
| உரிமமுள்ள நகரம் | பெங்களூர் |
|---|---|
| ஒலிபரப்புப் பகுதி | இந்தியா |
| வணிகப்பெயர் | 24 x இசைச் சேவை |
| அதிர்வெண் | 100.1 MHz |
| முதல் ஒலிபரப்பு | 26 சனவரி 2016 |
| வானொலி முறை | இந்தியப் பாரம்பரிய இசைக்கான அலைவரிசை |
| Former callsigns | அமிர்தவர்சினி |
| உரிமையாளர் | அனைத்திந்திய வானொலி |
| இணையலைபரப்பு | http://raagam.airbengaluru.com/ |
இராகம் (Raagam) என்பது அனைத்திந்திய வானொலியினால் இயக்கப்படும் ஒரு இந்திய முக்கிய வானொலி அலைவரிசையாகும். இந்த ஒலிப்பரப்பு 2016 சனவரி 26, இந்தியக் குடியரசு தினத்தன்று தொடங்கப்பட்டது. இராகம் பாரம்பரிய இசையை வழங்கவும் அர்ப்பணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அலைவரிசை 24 மணி நேர இணைய வானொலி சேவையாகச் செயல்படும். இது செய்மதித் தொலைக்காட்சி வசதி மூலம் இந்துத்தானி இசை கருநாடக பாரம்பரிய இசைக் கலவையினை வழங்குகிறது.[1][2]
இராகம் வானொலிச் சேவையானது 26 சனவரி 2016 அன்று பெங்களூரில் நடந்த ஒரு விழாவில் தொடங்கப்பட்டது. இந்த அலைவரிசை அனைத்திந்திய வானொலியின் திறன்பேசி செயலியான "நியூஸ் ஒன்ஏஐஆர்" உடன் பொது தளத்தில் செயலில் இருந்தது. இது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இயங்குதளங்களில் 18 மார்ச் 2013 அன்று மாலை 6 மணி முதல் கிடைத்தது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Play it Again". The Indian Express. 26 January 2016. http://indianexpress.com/article/entertainment/music/play-it-again-19/. பார்த்த நாள்: 26 January 2016.
- ↑ "All India Radio’s 24×7 classical music channel to be launched today". The Financial Express (India). 26 January 2016. http://www.financialexpress.com/india-news/all-india-radios-24x7-classical-music-channel-to-be-launched-today/202204/. பார்த்த நாள்: 26 January 2016.
- ↑ "AIR launches 24x7 classical music channel 'Raagam' in Bengaluru". Doordarshan. 26 January 2016. http://ddinews.gov.in/National/National%20-%20Headlines/Pages/air.aspx. பார்த்த நாள்: 26 January 2016.