உள்ளடக்கத்துக்குச் செல்

இரவு (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரவு ஜெயமோகன் எழுதிய சிறிய நாவல். 2010ல் தமிழினி வெளியீடாக வந்துள்ளது.

பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒருவனைப்பற்றிய கதை இது. பெரிய மிருகங்கள் எவையும் பகலில் விழித்திருப்பதில்லை. அவை இரவில் மட்டுமே வாழ்கின்றன என இவர்கள் நினைக்கிறார்கள். இரவே அழகானது பகல் அழகற்றது என்கிறார்கள். நாவல் இரவை குறியீடாக மாற்றுகிறது. மனித மனத்தின் ஆழத்தில் உள்ள இருண்ட பகுதிகளை இரவு என்று அது வகுத்துரைக்கிறது. இரவின் விரிவான வர்ணனைகள் கொண்ட படைப்பு.

தொடுப்பு

[தொகு]

இரவு முன்னுரை

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவு_(புதினம்)&oldid=657252" இலிருந்து மீள்விக்கப்பட்டது