இரவுச் சிற்றுண்டியகம் (ஓவியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரவுச் சிற்றுண்டியகம்
பிரெஞ்சு: Le Café de nuit
Le café de nuit (The Night Café) by Vincent van Gogh.jpeg
ஓவியர்வின்சென்ட் வான் கோ
ஆண்டு1888 (1888)
வகைகன்வசில் நெய்வண்ணம்
பரிமாணம்72.4 சமீ × 92.1 சமீ (28.5 அங் × 36.3 அங்)
இடம்யேல் பல்கலைக்கழக ஓவியக் காட்சியகம், New Haven

இரவுச் சிற்றுண்டியகம் ((பிரெஞ்சு: Le Café de nuit)) என்பது, டச்சு ஓவியரான வின்சென்ட் வான் கோவினால் செப்டெம்பர் 1888ல் ஆர்லே என்னும் இடத்தில் வரையப்பட்ட ஒரு நெய்யோவியம் ஆகும். இதன் தலைப்பு வலது கீழ் மூலையில் கையொப்பத்துக்குக் கீழே எழுதப்பட்டுள்ளது. இவ்வோவியம், யோசெப்-மிச்சேல் கினொக்சும், அவரது மனைவியும் நடத்திய சிற்றுண்டியகத்தின் உட்புறத்தைக் காட்டுகிறது.