இரவி கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆர். இரவி கண்ணன்
Ravi Kannan R
The Vice President, Shri Mohd. Hamid Ansari presenting the 16th Mahaveer Award to Dr. R. Ravi Kannan of Silchar, Assam for Excellence in the sphere of ‘Medicine’, in New Delhi on June 04, 2013.jpg
முன்னாள் துணை குடியரசுத் தலைவர் முகம்மது அமீத் அன்சாரி மகாவீர் விருதை இரவி கண்ணனுக்கு வழங்குகிறார்
தேசியம்Indian
பணிOncologist
அறியப்படுவதுபுற்று நோயாளிகளுக்கான இலவச மருத்துவம்
மருத்துவப் பணிவாழ்வு
களம்புற்றுநோயியல்

ஆர். இரவி கண்ணன் (Ravi Kannan R) இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணராவார். இவர் அசாமிலுள்ள கச்சார் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக உள்ளார். [1] இம்மருத்துவமனை புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் ஓர் இலாப நோக்கமற்ற மருத்துவமனையாகும். சென்னையில் உள்ள அடையார் புற்றுநோய் நிறுவனத்தில் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறையின் தலைவராகவும் கண்ணன் பணிபுரிந்துள்ளார். இந்தியாவில் வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருதை இவர் பெற்றுள்ளார். [2]

கல்வி[தொகு]

சென்னை கீழ்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவத்தில் இளநிலை பட்டம் பெற்ற இவர் தன்னுடைய முதுநிலை பட்டத்தை புது தில்லியிலுள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் படித்து பெற்றார். [3]

தொழில்[தொகு]

கண்ணன் சென்னை அடையார் புற்றுநோய் நிறுவனத்தின் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறைக்கு தலைமை தாங்கினார். [4] 2006 ஆம் ஆண்டு ஒரு சக ஊழியரின் வேண்டுகோளின் பேரில் கலந்தாலோசிப்பதற்காக இவர் முதன்முறையாக கச்சார் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட்டார். அப்போது அந்நிறுவனத்தின் அப்போதைய இயக்குநரைச் சந்தித்து உரையாடியபோது கச்சார் மையத்திற்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்தது. கண்ணன் தனது பயிற்சியை சென்னையில் விட்டுவிட்டு 2007 ஆம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் அசாம் மாநிலத்திற்குச் சென்றார், பராக் பள்ளத்தாக்கு மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகளை வழங்குவதற்காக சில்சாரில் [5] உள்ள கச்சார் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மூலம் மருத்துவச் சேவையை தொடர்ந்தார்.

விருதுகள்[தொகு]

மருத்துவத்திற்காக வழங்கப்படும் மகாவீர் விருது [6] 2013 ஆம் ஆண்டிலும் 2020 ஆம் ஆண்டு பத்மசிறீ [7] விருதும் கண்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவி_கண்ணன்&oldid=3074107" இருந்து மீள்விக்கப்பட்டது