இரவி அதீசிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரவி அதீசிங்
பிறப்புமே 30, 1971 (1971-05-30) (அகவை 52)
வாசிங்டன், டி. சி., அமெரிக்க ஐக்கிய நாடுகள்
பணிஉலகளாவிய முக்கிய பேச்சாளர், இசைக்கலைஞர், விமானி, கலாச்சார இராஜதந்திரி
உறவினர்கள்பார்க்க நேரு-காந்தி குடும்பம்
வலைத்தளம்
raviunites.com

இரவி அதீசிங் (Ravi Hutheesing) (பிறப்பு 30 மே 1971) இவர் ஓர் சர்வதேச முக்கிய பேச்சாளரும், [1] அமெரிக்க வெளியுறவுத்துறையில் பணியாற்றும் கலாச்சார இராஜதந்திரியும் [2] பாடகரும்,பாடலாசிரியரும் ஹான்சன் இசைக்குழுவின் முன்னாள் கித்தார் கலைஞரும், [3] எழுத்தாளரும் விமானியுமாவார். இவர் நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் . வம்சாவளியைப் பொறுத்தவரை, இவர் இந்தியா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்தவர். (லண்டனில் பிறந்த, அரை ஜெர்மன் / அரை-இந்திய வம்சாவளி தாய் அமிர்தா மூலம்).

இவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு [4] ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் முதல் பெண் தலைவரான விஜயலட்சுமி பண்டிட் ஆகியோரின் உறவினராவார். மேலும், இவர் சர்வதேச மூலதன நிறுவனத்தின் நிறுவனரும், தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அஜித் அதீசிங்கின் இளைய மகன் ஆவார்.

தொழில்[தொகு]

இவர் ஒரு முக்கிய பேச்சாளர். முதன்மையாக உலகளவில் கல்வித் துறையைப் பற்றி உரையாற்றுகிறார். சர்வதேச அளவிலான அமைப்பு, அமெரிக்க பள்ளி நிர்வாகிகள் சங்கம், மேற்பார்வை மற்றும் பாடத்திட்ட மேம்பாட்டு சங்கம் ஆகியவை இவரது முக்கிய வாடிக்கையாளர்களில் சில. [5]

இவர், 1997 ஆம் ஆண்டில் ஹான்சன் (மெர்குரி / பாலிகிராம்) இசைகுழுவிற்காக ஒரு கித்தார் கலைஞராக இருந்தார். அவர்கள் பில்போர்டு தரவரிசையில் # 1 இடத்தைப் பிடித்தனர். மேலும், மூன்று கிராமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அவர்கள் லேட் ஷோ வித் டேவிட் லெட்டர்மேன், தி டுநைட் ஷோ வித் ஜே லெனோ, தி ரோஸி ஓ'டோனல் ஷோ, சனிக்கிழமை இரவு நேரலை, குட் மார்னிங் அமெரிக்கா, டுடே போன்ற பல தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றினர். மேலும் மேடிசன் ஸ்கொயர் கார்டன் மற்றும் ஒரு வெள்ளை மாளிகை கிறிஸ்துமஸ் விருந்திலும் நிகழ்ச்சிகளை வழங்கினர். [6]

ஜார்ஜ் அறக்கட்டளையுடன் இணைந்து இந்தியாவில் தமிழ்நாட்டில் சாந்தி பவன் குழந்தைகள் திட்டத்தில் ஏழைகளுக்கு (தீண்டத்தகாத சாதி) அதிகமான பள்ளிகளை உருவாக்குவதற்கு தலைமை தாங்குகிறார். [7]

2018 ஆம் ஆண்டில், இவர் உலகெங்கிலும் 100 க்கும் மேற்பட்ட பள்ளிகளின் வளர்ந்து வரும் வலையமைப்பான இரவி பள்ளிகளை அறிமுகப்படுத்தினார். இது மாணவர் குழுக்களுக்கிடையில் நிகழ்நேர ஆடியோ-வீடியோ தொடர்புகளில் பங்கேற்கிறது. நிறுவன நிகழ்ச்சி நிரல்களால் உருவாகும் மறைமுகமான சார்புகளுக்கு அடிபணியாமல், புவியியல் மற்றும் சமூக பொருளாதார எல்லைகளில் இயற்கையாகவே இளைஞர்களை பிணைப்பதன் மூலம் இத்தகைய பரிமாற்றங்கள் உலக அமைதியை மேம்படுத்துகின்றன என்று அவர் நம்புகிறார். [8]

இவர், 2015 ஆம் ஆண்டில் அமெரிக்க வெளியுறவுத்துறையின் கலாச்சார இராஜதந்திரியாக பணியாற்றத் தொடங்கினார். உருசியாவில் தொழில்முனைவோர் மற்றும் இளைஞர் தலைமை குறித்த விளக்கக்காட்சிகளை வழங்கினார். 2016 ஆம் ஆண்டில், இவர் இந்தோனேசியாவுக்குச் சென்று, மிகவும் கடுமையான கலாச்சார மற்றும் மத பிளவுகளைத் தடுக்கும் பாடல் எழுதுதல் மற்றும் கலாச்சார தொழில்முனைவோர் திட்டங்களை உருவாக்கினார். மேலும் 2017 ஆம் ஆண்டில் ஈராக் மற்றும் லெபனானில் இதேபோன்ற திட்டங்களை உருவாக்கினார். இதில் சில நாட்களுக்கு முன்னர் [[இசுலாமிய அரசு|இசுலாமிய அரசு அல்லது ஈராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய அரசிலிருந்து]] விடுவிக்கப்பட்ட மொசூல் மாணவர்களும், சிரியர்களும் அழிந்த நகரமான அலெப்போவிலிருந்தும் இருந்தது. [9]

குறிப்புகள்[தொகு]

  1. http://theholmeseducationpost.com/how-did-ravi-hutheesing-shape-his-career-path/
  2. https://www.rma.ru/en/show/news/23785/
  3. A Man, a Guitar and a Camera: It Clicks By KENNETH BEST, த நியூயார்க் டைம்ஸ், 21 October 2001. "Ravi Hutheesing, a Greenwich resident and guitarist who toured with Hanson, the heart-throb brothers who had a top hit with the pop tune MMMBop"
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-07-07. பார்க்கப்பட்ட நாள் 2020-08-11.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-08-05. பார்க்கப்பட்ட நாள் 2020-08-11.
  6. https://www.courant.com/news/connecticut/hc-xpm-1999-04-15-9904150739-story.html
  7. https://www.shantibhavanchildren.org/about/partners/
  8. https://raviunites.com/schools/
  9. https://www.rma.ru/en/show/news/23785/
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவி_அதீசிங்&oldid=3544008" இலிருந்து மீள்விக்கப்பட்டது