உள்ளடக்கத்துக்குச் செல்

இரவிவர்மன் குலசேகரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரவிவர்மன் (Ravivarman) (c. 1266/7 – 1316/7), மகாராஜா இரவிவர்மன், குலசேகர பெருமாள்,[1]  தென்னிந்தியாவில் கொல்லத்தை தலைநகராகக் கொண்ட வேணாட்டின் ஆட்சியாளர் ஆவார். அவர் தனது தந்தை செயசிம்மதேவா வழியில் பழங்கால சேர வம்சத்தைச் சார்ந்த பரம்பரையில் வந்தவர் ஆவார். பாண்டிய மரபைச் சார்ந்த மாறவரமன் குலசேகர பாண்டியனின் மருமகனும் ஆவார். இரவிவர்மன் தென்னிந்தியாவின் பெரும்பகுதிகளை குறுகிய காலத்திற்குள் (1312 – 1316) படையெடுத்துச் சென்றுள்ளார். கல்ஜி வம்சத்தினரால் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகளின் விளைவாக பாண்டிய நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தைத் திறமையாக, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

தமிழ் மேதை "குலசேகரா" உடன் ரவிவர்மன் வெளியிட்ட நாணயங்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாண்டிய ஆட்சியைக் கைப்பற்றியதன் நினைவைப் போற்றும் விதமாக, சேரர்களின் சின்னமான யானையை ஒருபுறத்திலும் பாண்டியரின் சின்னமான இரட்டை மீன்களை மறுபுறத்திலும் பொறிக்கப்பெற்ற நாணயங்களை வெளியிட்டார். காக்கத்திய ஆட்சியாளரான பிரதாபருத்ரா II காலத்திய ஒரு தெலுங்கு பதிப்பில் (கிபி 1317), அவர் "மலையாள திருவடி குலசேகரா" என்று அழைக்கப்படுகிறார்.[2]

இரவிவர்மன் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாபசுவாமியின் ஒரு ஆர்வமிக்க பக்திநெறியாளர் ஆவார். "பத்மநாப பாததாசா" என்ற சொல் அறிந்த வகையில் இரவிவர்மன் குலசேகராவால் தான் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடும்.[3]

தொடக்க கால வாழ்க்கை

[தொகு]

வேணாடு என்பது கன்னியாகுமரிக்கும் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் ஆகியவற்றுக்கிடையே, தற்போதைய கேரளாவின் தென்பகுதியில் பரவிக்கிடக்கும் பகுதியாகும். கொல்லம் இந்தப் பகுதியின் தலைநகராக விளங்கியது. வேணாட்டின் ஆட்சியாளர்களன குலசேகர/வேணாட்டுச் சேர வம்சத்தினர், மதுரை பாண்டியர்களின் ஒன்றுவிட்ட சுதந்திரமான நல்கையாளர்கள் ஆவர். அவர்கள் கோட்டாறு மற்றும் நாஞ்சில் நாடு ஆகிய வளமான நிலப்பகுதிகளின் மீதான மேலான ஆதிக்கத்திற்காக பாண்டியர்களுடன் போராடினர். இவர்கள் பல்வேறு திருமணத் தொடர்புகளை பாண்டிய ஆட்சியாளர்களுடன் கொண்டிருந்தனர். மேலும், பாண்டிய வம்ச அரசர்களுடன் உறுதியற்ற அல்லது நிலைத்தன்மையற்ற உறவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.[1]

தெற்கு கேரளாவில் அமைந்துள்ள கொல்லம். இரவிவர்மன் குலசேகரன் பெருமையுடன் தன்னைக் கொல்லத்தின் ஆட்சியாளர் என்று அழைத்துக் கொண்டார்.

13 ஆம் நூற்றாண்டில், பாண்டிய வம்சத்தினர் வேணாடு சேரர்கள் மீது மிகவும் அண்மைய மேலாதிக்கம் செலுத்தினர். சடைவர்ம சுநதர பாண்டியர் (1251 – 1268) மற்றும் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268 – 1310) போன்ற பாண்டிய வம்ச அரசர்கள் வேணாட்டின் மீது இராணுவ படையெடுப்பை நிகழ்த்தினர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள ஒரு சமஸ்கிருத கல்வெட்டு சடைவர்ம சுந்தர பாண்டியனால் கேரள அரசர் கொலை செய்யப்பட்டதைப் பற்றிப் பேசுகிறது.

மாறவர்மன் பெரும்பாலும் வேணாட்டிற்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம். ஒருவேளை, உள்ளூரில் அதிகரித்து வந்த கலவரங்களை அடக்கும் பொருட்டு, தலைநகரான கொல்லத்தைக் கைப்பற்றினார். வேணாட்டின் மீதான மேலாதிக்கத்தைக் குறிக்கும் "சேரனை வென்ற" மற்றும் "கொல்லம் கொண்ட" போன்ற பட்டங்களை அவர் எடுத்துக் கொண்டார். சுந்தர பாண்டியன் மற்றும் அவரின் இணைப் பிரதிநிதியான வீரபாண்டியன் ஆகியோரைக் குறித்த பல கல்வெட்டுகள் நாஞ்சில் நாட்டில் காணப்படுகின்றன.

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உள்ள கிரந்த எழுத்துக்களாலான கல்வெட்டின்படி இரவிவர்மன் சக ஆண்டு 1188 ஆம் (ஆண்டு வரிசையின்படி தெகாவ்யாப்யா) (தொடர்புடைய அனொ டாமினி ஆண்டு கி.பி 1266 - 67) ஆண்டில் பிறந்தார் எனத் தெரிய வருகிறது.[4] அரச குடும்பத்தில் மற்ற இளவரசர்களைப் போலவே, அவர் தனியாக கல்வி கற்றார். அவர் ஆற்றிங்கல் குழந்தையில்லா இராணியான அவினி அம்மா தம்புரான் என்பவரால் தத்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "The Royal Ark (Travancore)". waww.royalark.net. பார்க்கப்பட்ட நாள் 2012-08-24.
  2. Annual Reports on Indian Epigraphy The Kakatiyas
  3. K. N. Ganesh. "To Whom Does Temple Wealth Belong? A Historical Essay on Landed Property in Travancore". Review of Agrarian Studies 2013
  4. It records that the king set up an image of Ranganatha, celebrated the festival of lights and provide for payment, on the day of Shatabhisha in the month of Kanya, i.e., Purattasi, of 100 panas each to 50 learned men. The inscription in verse, is said to have been composed by poet Bhushana.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவிவர்மன்_குலசேகரா&oldid=3003510" இலிருந்து மீள்விக்கப்பட்டது