உள்ளடக்கத்துக்குச் செல்

இரவில் மலரும் கள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரம்மக் கமலம்

இரவில் மலரும் கள்ளி (Night-blooming cereus) என்பது கள்ளி வகை இனத்துச் செடியிலிருந்து இரவில் பூக்கும் மலர் ஆகும். எப்போதும் இம்மலர் இரவு நேரங்களில் தான் மலரும் தன்மை கொண்டது. இம்மலரின் வாழ்வு ஒரே நாள் மட்டுமே., இது ஓர் ஆண்டில் ஒரே தடவை மட்டும் இரவில் பூத்து ஒரே நாளில் வாடிப்போகும் தன்மை கொண்டது.[1] இம்மலரை இரவின் இளவரசன் என்றும் இரவின் இளவரசி என்றும் அழைக்கிறார்கள்.

வகைகள் மற்றும் இனங்கள்

[தொகு]
மாலொஹாக்டொஸ் வகை (Melocactus matanzanus)

இதன் துணைக்குடும்பமாக காக்டோரியா வகை (Cactoideae) மலர் அறியப்படுகிறது.

தோற்றம்

[தொகு]

இம்மலர்கள் பொதுவாக வெள்ளை கலந்த மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. இரவு நேரங்களில் பூப்பதால் காலை நேரத்தில் பார்க்கும்போது வாடிவதங்கி விடுகிறது. இம்மலர் பூக்கும் தாவரமானது பண்ணை வீடுகளில் குளிர்ந்த பகுதியில் வளரும் தன்மை கொண்டது.

வளர்ப்பும், பயன்பாடும்

[தொகு]
ஒரு மலரின் தோற்றம் (Selenicereus grandiflorus)

இதன் பழத்திற்காகவும் நடவு செய்யப்படுகிறது. இந்த இனத்தில் அன்டட்தொஸ் (Undatus) என்ற கள்ளி வகையானது அதிகமாக பழங்களைத் தரவல்லது.

ஒருவகைப் பூ

கலாச்சாரம்

[தொகு]
  • 18ம் நூற்றாண்டில் டாக்டர் ராபர்ட் ஜான் தோர்ன்டன் (Dr. Robert John Thornton) என்பவர் இந்தமலரை (புளோரா கோயில்) என்று குறிப்பிடுகிறார்.
  • ஹவாய் தீவுகளில் இந்தவகையான பூக்கள் எரிமலைக் குழம்புகளில் பூக்கும் என்று அறியப்படுகிறது.[2]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. Hecht, Hans (1997). Cacti & Succulents. Sterling Pub. Co. p. 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8069-0549-5.
  2. [1]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவில்_மலரும்_கள்ளி&oldid=3795220" இலிருந்து மீள்விக்கப்பட்டது