உள்ளடக்கத்துக்குச் செல்

இரல்லாபண்டி கவிதா பிரசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரல்லாபண்டி கவிதா பிரசாத்
பிறப்புஇரல்லபண்டி வெங்கடேசுவர பிரசாதா ராஜு
1961 (1961)[1]
நெமாலி, கம்பலகுடம் மண்டலம், கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு(2015-03-15)15 மார்ச்சு 2015[2]
பணி(உருங்கிணைந்த ஆந்திரா, மற்றும் தெலங்காணா அரசின் கலாச்சாரத் துறையின் இயக்குநர்)
பெற்றோர்
  • இரல்லபண்டி கோட்டீசுவர ராஜு (தந்தை)
  • இரல்லபண்டி ரத்னவரதமாள் (தாய்)

இரல்லபண்டி கவிதா பிரசாத் (Rallabandi Kavitha Prasad) (பிறப்பு இரல்லாபாண்டி வெங்கடேசுவர பிரசாதா ராஜு) இந்தியவைச் சேர்ந்த கவிஞரும், கவனக நிபுணரும் ஆவார்.[3] இவர் சதாவதானம் (நூறு மடங்கு நினைவாற்றல்) மற்றும் திவிசாதவதனம் (இருநூறு மடங்கு நினைவாற்றல்) உட்பட 500 க்கும் மேற்பட்ட கவனக நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். நவரசவதானம் (ஒன்பது மடங்கு நினைவாற்றல்), அஷ்டாதவதனம் (பதினெட்டு மடங்கு நினைவாற்றல்) போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தியுள்ளார்.[4] “அவதான வித்யா-ஆரம்ப விகாசலு” என்ற தலைப்பில் தனது ஆராய்ச்சிக்காக உசுமானியா பல்கலைக்கழகத்தில் தத்துவவியலில் முனைவர் பட்டம் பெற்றார். மேலும் இவர் “அவதான ராராஜு ” என்றும் அழைக்கப்பட்டார்.[5] நாகினி தேவி என்பவரை மணந்தார். இவர்களுக்கு இராமகோட்டிசுவர ராஜு மற்றும் சம்வரன் காஷ்யப் என இரு மகன்களௌள்ளனர்.

இளமை வாழ்க்கை

[தொகு]

இரல்லபண்டி கவிதா பிரசாத் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தின் (இப்போது என் டி ஆர் மாவட்டம்) கம்பலகுடெம் மண்டலத்தின் நெமாலியில் பிறந்தார். கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் கல்வியியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார். பத்ராச்சலம் மற்றும் சரபாகா பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் இவருக்கு அரசுப்பணி கிடைத்தது. அங்கு தெலுங்கு மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்த பணியாற்றினார்.[6]

தொழில் வாழ்க்கை

[தொகு]

இரல்லபண்டி கவிதா பிரசாத் இந்திய அஞ்சல் சேவையில் சேர்ந்து ஐதராபாத்தில் அஞ்சல் அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் குடிமைப் பணிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று சமூக நலத்துறையில் துணை இயக்குநர் ஆனார். பின்னர் ஆந்திரப் பிரதேசத்தின் பிராந்திய இணை இயக்குநர், கலாச்சாரத் துறையின் இயக்குநர்,[7][8] மற்றும் பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்திலும் பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்காணாவிலும் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரியாகவும் பணியாற்றினார்.[9]

தெலுங்கு மொழி மற்றும் இலக்கியத்தை மேம்படுத்துதல்

[தொகு]

பிரசாத் தெலுங்கு மொழியில் புலமை வாய்ந்தவராக அறியப்பட்டார்.[10] இவர் அஷ்டவதானம், சாதாவதானம் மற்றும் அஷ்டாதாச அவதானம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி, நினைவாற்றல் கலையில் சிறந்து விளங்கினார். மேலும், 500 க்கும் மேற்பட்ட அவதானங்களை நிகழ்த்தினார்.[11]

இவர் ஒரு பேச்சாளராகவும் இருந்தார். டாக்டர் சி. நாராயண ரெட்டி முன்னிலையில், கண்ட பாடியம் பாணியில் 300 கவிதைகளை வழங்கினார். மேலும் டாக்டர் ரெட்டியால் ‘ஆசு கவி சாம்ராட்’ என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டது. பத்திராசலம் கோவிலில் “கவிதையில் வாழ்க ” என்ற நிகழ்ச்சியையும் நிகழ்த்தினார்.

2012 ஆம் ஆண்டில் திருப்பதியில் நான்காவது உலகத் தெலுங்கு மாநாட்டை ஏற்பாடு செய்ய இவர் உதவினார்.[12][13][14][15][16]

இறப்பு

[தொகு]

சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட பிரசாத் தனது 53 வயதில் இறந்தார்.[17][18]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "అవధాన రారాజు అస్తమయం". Sakshi (in தெலுங்கு). 2015-03-16. Retrieved 2023-05-31.
  2. "Rallabandi Kavitha Prasad passes away". The Hindu. 16 March 2015. https://www.thehindu.com/news/cities/Hyderabad/rallabandi-kavitha-prasad-passes-away/article6997744.ece. பார்த்த நாள்: 15 February 2020. 
  3. "These Beautiful Lines Are Proof That Rallabandi Kavita Prasad Is A Poet Who Has No Comparison!".
  4. "Litterateur Rallabandi Passes Away". The New Indian Express. 16 March 2015. Retrieved 2023-05-31.
  5. "ఆయనను 'పలకరిస్తే పద్యం!". తెలంగాణ (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-11-01. Retrieved 2023-05-31.
  6. India, The Hans (2017-12-14). "A literary genius nonpareil". www.thehansindia.com (in ஆங்கிலம்). Retrieved 2023-05-31.
  7. "World Telugu Conference Tirupathi, Fourth World Telugu Conference, Worldteluguconference.com". www.worldteluguconference.com. Retrieved 2023-05-31.
  8. "A taste of Telugu this Hyd Lit Fest". The Times of India. 2013-01-18. https://timesofindia.indiatimes.com/life-style/books/features/a-taste-of-telugu-this-hyd-lit-fest/articleshow/18061909.cms. 
  9. T. T. D. News. "TTD PRO AND HDPP CHIEF CONDOLES THE DEATH OF RALLABANDI KAVITHA PRASAD – TTD News" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-05-31.
  10. "'Perini has lasya too'" (in en-IN). The Hindu. 2014-11-06. https://www.thehindu.com/features/friday-review/perini-has-lasya-too/article6571328.ece. 
  11. India, The Hans (2015-03-16). "Popular Telugu poet Dr Rallabandi dies Hyderabad". www.thehansindia.com (in ஆங்கிலம்). Retrieved 2023-05-31.
  12. "T-Writers Refuse ASDF to Attend WTC" (in en). 2012-12-26. https://www.pressreader.com/india/deccan-chronicle/20121226/281758446620228. 
  13. admin (2015-03-19). "Tributes paid to Kavitha Prasad | Andhra Pradesh First" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-05-31.
  14. "Telugu lit: Neither local, global nor novel?". The New Indian Express. 19 January 2013. Retrieved 2023-05-31.
  15. "Telugu Poet Rallabandi Kavita Prasad Dies of Illness". Gulte.com.
  16. "Photos - Dr. Rallabandi Kavitha Prasad 1st Obituary". www.ragalahari.com (in ஆங்கிலம்). Retrieved 2023-05-31.
  17. "Rallabandi Kavitha Prasad passes away" (in en-IN). The Hindu. 2015-03-15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/Hyderabad/rallabandi-kavitha-prasad-passes-away/article6997744.ece. பார்த்த நாள்: 2023-05-31. 
  18. India, The Hans (2015-03-16). "Who killed Rallabandi?". www.thehansindia.com (in ஆங்கிலம்). Retrieved 2023-05-31.