இரம்யா வனிகசேகர
இரம்யா வனிகசேகர | |
|---|---|
රම්යා වනිගසේකර | |
| தாய்மொழியில் பெயர் | රම්යා වනිගසේකර |
| பிறப்பு | 17 சூலை 1950 கோடியாகும்புர, பிரித்தானிய இலங்கை |
| இறப்பு | 8 மார்ச்சு 2024 (அகவை 73) கொழும்பு, இலங்கை |
| கல்வி | பிந்தெனிய வித்யாச்சக்கரவர்த்தி மத்திய கல்லூரி |
| பணி | நடிகை, நடிகர்களுக்கு மொழி, உச்சரிப்பு மற்றும் குரல் வளம் இல்லாதபோது குரல் கொடுக்கும் கலைஞர் |
| செயற்பாட்டுக் காலம் | 1974–2024 |
| வாழ்க்கைத் துணை | ஆர். ஆர். சமரகோன் (தி. 1987; இற. 2010) |
| பிள்ளைகள் | ஒரு மகள் |
இரம்யா வனிகசேகர (Ramya Wanigasekara) (17 சூலை 1950 – 8 மார்ச் 2024) இலங்கைத் திரைப்படத்துறையிலும், நாடகம் மற்றும் தொலைக்காட்சியிலும் நடிகையாக இருந்தார்.[1] இலங்கை வானொலியின் முன்னோடியான இவர்,[2] இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இதில் செய்தி வாசிப்பாளராகவும்[3] பின்னணிப் பாடகியாகவும் இருந்தார்.[4]
வனிகசேகர 8 மார்ச்சு 2024 அன்று, தனது 73ஆவது வயதில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் காலமானார்.[5][6]
துவக்ககால வாழ்க்கை
[தொகு]வனிகசேகர 1950ஆம் ஆண்டில் சூலை 17ஆம் தேதி கேகாலை, கோட்டியகும்புராவில் ஏழு உடன்பிறப்புகள் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். கேகாலை, ஹெட்டிமுல்லாவைச் சேர்ந்த இவரது தந்தை ஒரு தோட்டக் கண்காணிப்பாளராக இருந்தார். இவரது தாயார் எகெலியகோடாவைச் சேர்ந்தவர். இரம்யாவுக்கு இரண்டு மூத்த சகோதரிகள், இரண்டு மூத்த சகோதரர்கள் மற்றும் இரண்டு இளைய சகோதரர்கள் இருந்தனர். இவர் கோட்டியகும்புராவில் உள்ள ஆம்பே மகா வித்யாலயாவில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். பிண்டெனிய வித்யாசக்கரவர்த்தி தேசியக் கல்லூரியில் பயின்ற பிறகு, இறுதியாக ருவன்வெல்ல ராயல் கல்லூரியில் தனது கல்வியை முடித்தார்.[7]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]வனிகசேகரா கேளனி பாலமா என்ற மேடை நாடகத்தின் போது நாடக ஆசிரியர் ஆர். ஆர். சமரக்கோனை மணந்தார்.[8] இத்தம்பதியருக்கு புத்திகா முடிதானி என்ற ஒரு மகள் இருந்தார்.[4] புத்திகா சிறு வயதிலேயே கேளனி பாலமாவில் "சுரங்கனி"யாக நடித்தார்.[7] இவர் மேடை ஆடை வடிவமைப்பில் சிறந்து விளங்கினார்.[9]
தொழில் வாழ்க்கை
[தொகு]1974ஆம் ஆண்டில் சண்டி குணதிலகே தயாரித்த மேடை நாடகமான 'கெவயோ' மூலம் வனிகசேகர மேடை பின்னணிப் பாடகியாக நாடகத் துறையில் நுழைந்தார்.[4] இதன்பிறகு, ஜெயதிச அலககோன் தயாரித்த பல மேடை நாடகங்களில் இவர் பின்னணிப் பாடகியானார்..[10] 1976ஆம் ஆண்டில், ரஞ்சித் தர்மகீர்த்தியின் 'கஸ்திராஜ மகத்தயா' நாடகத்தில் இவர் முதன்முதலில் நடித்தார்.[7] பின்னா் பிரேமசிறி கேமதாசாவின் இசையமைப்பில் தர்மகீர்த்தியின் 'அங்கார கங்கா கலா பாசி' நாடகத்திற்கு பின்னணிப் பாடல்களைப் பாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இந்த நாடகத்திலும் இவர் நடித்தார்.[11][8]
1978ஆம் ஆண்டில், சூல கரியவசம் இயக்கிய 'மன ரஞ்சன வேட வர்ஜன' நாடகத்தில் "குணாவதி" என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மேடை நாடகத்தில் இவருக்கு ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. இந்த நேரத்தில் மூத்த நடிகை சந்திரா களுவராச்சி கர்ப்பமாக இருந்ததால், களனி பாலமாவில் இவரது பாத்திரமான "மாடில்டா" தயாரிப்பாளரும் வருங்கால கணவருமான ஆர். ஆர். சமரகோனால் வணிகசேகரவுக்கு வழங்கப்பட்டது.[10][12] இவர் சமரகோனின் அகாசின் வடுனு மினிசு (1971), இடமா (1975), ஜெயிலர் உன்னகே (1986), டூவிலி (1990) ராஜா கதாவா (1991) ஆகிய நாடகங்களில் நடித்தார்.[7] பின்னர் அவர் சண்ட கிந்தூரி, முகூடு புத்து, மா கேனே ரீரி யகா,[13]லியதம்பர, சிரி சங்கபோ மற்றும் கிரு நாதி லோவா உள்ளிட்ட பல நாடகங்களில் நடித்தார்.[11][8][4] இவர் தொடர்ந்து 41 வருடங்கள் களனி பலமாவில் "மாடில்டா" என்ற பாத்திரத்தில் நடித்தார்.[14]
1980இல், இவர் தக்சிலாவா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ரேடியோ சிலோனில் சேர்ந்தார்.[7] இந்த நிகழ்ச்சியில் கவிதை, பாடல், நாடகம் மற்றும் செய்திகள் இடம்பெற்றிருந்தன. 1981 முதல், இவர் 2006இல் ஓய்வு பெறும் வரை செய்தி வாசிப்பாளராக இருந்தார்.[10] 2008இல் இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒப்பந்த அடிப்படையில் மாற்றுச் செய்தி வாசிப்பாளராகவும் [11][8] வானொலியில் முதல் தர பாடகியாகவும் இருந்தார்.[4]
1983இல், தர்மசேன பத்திராஜாவின் வலிப்பு நோய் குறித்த 'கங்குலேன் ஏகோதாதா' என்ற ஆவணப்படத்தின் முதல் நாடகக் குழுவில் வனிகசேகர உறுப்பினராக இருந்தார்.[10] இந்த நாடகம் செருமனியில் நடந்த ஆவணப்படப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றது. இவர் கண்டே கெடாரா, பாலிங்கு மெனிகே, மெனிக் நதியா கலா பாசி, தெனுவரா மெனிகே, பாபா, அலுத் கெடாரா போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும், யெஸ் பாஸ் என்ற நகைச்சுவை சிட்காமிலும் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட பல பாத்திரங்களில் நடித்தார்.[11][8] தம்ம ஜகோடாவின் பாலிங்கு மெனிகேவில் இவரது பாத்திரம் இவரது தொலைக்காட்சி நாடக வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.[4]
26 அக்டோபர் 2019 அன்று, கேளனி பலமா என்ற மேடை நாடகத்தின் 40ஆவது ஆண்டு விழா, அழகியல் பல்கலைக்கழகத்தின் பாணிபாரத அரங்கில் மாலை 3.30 மணிக்கு '40 வாசராக ரங்கபினந்தனயா' என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது.[15] இந்த நாடகம் முதன்முதலில் 25 அக்டோபர் 1978 அன்று லும்பினி திரையரங்கில் மேடையேற்றப்பட்டது.[12] 2019ஆம் ஆண்டில், ஜாஸ்மின் கலையரங்கத்தில் ஜனபிமானி (ஹெல மகா ராவண ராஜபிமானி) விருது வழங்கும் விழாவில் சிறந்த சேவை விருதை வென்றார்.[16]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ramya Wanigasekara filmography". Sinhala Cinema Database. Archived from the original on 28 January 2020. Retrieved 12 August 2020.
- ↑ "සම්මානනීය නිවේදිකා හා රංගන ශිල්පිනි රම්යා වනිගසේකර දිවිසැරියට සමුදෙයි". Sarasaviya. Retrieved 17 March 2024.
- ↑ "රම්යාගේ සුරම්ය වූ රැඟුම්". Sarasaviya. Archived from the original on 26 November 2020. Retrieved 2 December 2020.
- 1 2 3 4 5 6 "Who else can do what I did - Ramya Wanigasekara". Deshaya. Archived from the original on 19 December 2019. Retrieved 12 February 2020.
- ↑ "Veteran Journalist Ramya Vanigasekera passes away" (in si). Divaina. 8 March 2024 இம் மூலத்தில் இருந்து 8 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240308162044/https://divaina.lk/%E0%B6%B4%E0%B7%8A%E0%B6%BB%E0%B7%80%E0%B7%93%E0%B6%B1-%E0%B6%B8%E0%B7%8F%E0%B6%B0%E0%B7%8A%E0%B6%BA%E0%B7%80%E0%B7%9A%E0%B6%AF%E0%B7%92%E0%B6%B1%E0%B7%93-%E0%B6%BB%E0%B6%B8%E0%B7%8A/.
- ↑ "ජගත් කාන්තා දිනයේ ලොවෙන් සමුගත් අසහාය හඩ පෞර්ෂය රම්යා වනිගසේකර Veteran actress & journalist Ramya Wanigasekara passes away – SMN24". Archived from the original on 8 March 2024. Retrieved 8 March 2024.
- 1 2 3 4 5 "I remember my life". Hiru FM. Archived from the original on 8 March 2024. Retrieved 12 February 2020.
- 1 2 3 4 5 "The Kelani Palama is a milestone in my life". Tharunie. Archived from the original on 17 December 2019. Retrieved 12 February 2020.
- ↑ "Multi faceted Ramya Wanigasekara". Daily Mirror. Archived from the original on 8 March 2024. Retrieved 14 August 2020.
- 1 2 3 4 "All aspects of art are important to me". Silumina. Archived from the original on 8 August 2020. Retrieved 12 February 2020.
- 1 2 3 4 "My voice and beauty remain in the hearts of people ...... - Veteran artist Ramya Wanigasekara". divaina.com. Upali Newspapers (Pvt) Ltd. 17 November 2017. Archived from the original on 30 December 2019. Retrieved 12 February 2020.
- 1 2 "Only Geetha Kanthi and I are still on the Kelani Palama". Sarasaviya. Archived from the original on 24 February 2020. Retrieved 12 February 2020.
- ↑ "ජේන්, රොසලින් සහ සුන්දරී". Sarasaviya. 28 October 2020. Archived from the original on 1 December 2020. Retrieved 2 December 2020.
- ↑ "41 years as Matilda". Ceylon Today. Archived from the original on 8 March 2024. Retrieved 14 August 2020.
- ↑ "Kelani Palama 40th year show". Daily Mirror. Archived from the original on 8 March 2024. Retrieved 14 August 2020.
- ↑ "Janabhimani Awards presented". Sarasaviya. 4 December 2019. Archived from the original on 20 January 2022. Retrieved 2 August 2020.