இரம்யா சதாசிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரம்யா சதாசிவம் என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் ஓவியர் ஆவார். இவர் வரைந்த ஓவியங்களுக்காக பிரபுல்ல தணுக்கர் விருது 2016இல் வழங்கப்பட்டது. சுபந்தன் சிறந்த கலைஞர் விருதும் வழங்கப்பட்டது[1].

இரம்யா சதாசிவம் உயிர்த் தொழில் நுட்பத்தில் பட்டமும், மேற்கத்தியக் கலைகளில் டிப்ளமாவும் பெற்றார். 2006 ஆம் ஆண்டு முதல் வரையத் தொடங்கினார். தொடக்கத்தில் கரிக்கோலில் வரைந்தார். பின்னர் ஆயில் வண்ணத்தில் வரைந்தார். இந்திய நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், சிற்றூர்ப்புற வாழ்க்கை முறைகள், உழைப்பாளிகளின் அன்றாட அலுவல்கள், பெண்களின் நிலைகள் ஆகியனவற்றை ஓவியத்தில் சித்தரித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. போகிற போக்கில்: தூரிகையால் பேசும் காரிகை, தி இந்து (தமிழ்), நாள்: நவம்பர் 6, 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரம்யா_சதாசிவம்&oldid=2711564" இருந்து மீள்விக்கப்பட்டது