இரமணன் (சொற்பொழிவாளர்)
ரமணன் (இசைக்கவி ரமணன்) என்று பிரபலமாக அழைக்கப்படும் இவர், நெல்லையில் பிறந்தவர். கவிஞர், எழுத்தாளர் பாடகர், சொற்பொழிவாளர், தொகுப்பாளர், நாடக நடிகர் என்று பன்முகங்கள் கொண்டவர். தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றவர். ‘தி இந்து’ பத்திரிகையில் (சென்னை, பெங்களூரு, மதுரை, விசாகப்பட்டினம் கிளைகளில்) 28 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். சென்னை உட்பட பல ஊர்களில் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றி வருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் வெங்கடேஸ்வரன். இளமைக் காலம் முதல் தமிழ் இலக்கியங்களின் மீது ஆர்வம் கொண்ட ரமணன், பள்ளிப் பருவத்தில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். சென்னை ஏ எம் ஜெயின் கல்லூரியில் பயின்ற இவர், தி இந்து நாளிதழின் விற்பனைப் பிரிவில் பணியாற்றியவர். பின் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று சொற்பொழிவு, கவியரங்கம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கவிதைக்காகத் தமிழக அரசின் கலைமாமணி விருதை 2018-ம் ஆண்டில் பெற்றார். [1]
பெயர்க் காரணம்
[தொகு]கவிதைகளை இசையுடன் பாடும் திறமை பெற்ற ரமணனை கௌரவிக்கும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த மகேஷ் கிருஷ்ணன் என்பவர் 'இசைக்கவி' என்ற பட்டத்தை வழங்கினார்.
சொற்பொழிவுகள்
[தொகு]தொலைக்காட்சிகளில் தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ள ரமணன், பல நேர்காணல்களிலும் பங்கேற்றுள்ளார்.
தொலைக்காட்சி | தொடர் | நிகழ்ச்சிகள் |
---|---|---|
பொதிகை | கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்[2] | 200 |
மக்கள் | பண்ணிசை வித்தகர்கள்[3] | 165 |
மக்கள் | தமிழ் அமிழ்து | 165 |
சங்கரா | காஞ்சி மகான் | 501 |
சங்கரா | தர்மத்தின் பாதையில் (தமிழ்&ஆங்கிலம்)[4] | 275 |
சங்கரா | தெய்வத்தின் குரல் | 60 |
சங்கரா | காஞ்சி முனியின் காலடியில் | 50 |
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்திவரும் 'காலங்களில் அவன் வசந்தம்' - கண்ணதாசன் நிகழ்ச்சி[5], மதுரத்வனி மற்றும் இண்டேன் குருகேஸ் ஏஜென்சி நடத்தும் 'இசைக்கவியின் இதயம்' நிகழ்ச்சி, மதுரத்வனி மற்றும் சேவாலயாவின் 'மாதம் தோறும் மகாகவி' உட்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று சொற்பொழிவாற்றியவர். சென்னைக் கம்பன் கழகமும் பாரதிய வித்யா பவனும் சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து, 2011 ஜனவரியில் ‘ஔவையின் ஆத்திசூடி’ என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியைச் சென்னையில் நடத்தின. அதில் 2011 ஜனவரி 31 அன்று, ‘ஆறுவது சினம்’ என்ற தலைப்பில் இசைக்கவி ரமணன் சொற்பொழிவு நடத்தினார்.[6] கோவையில் "பாரதி பார்வையில் கம்பன்" என்ற தலைப்பில் மணி உயர்நிலைப் பள்ளி, நாணி பல்கிவாலா அரங்கில் 2011ல் பேசினார்.[7]
தொலைக்காட்சி, மேடை நாடகங்கள்
[தொகு]இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கிய ‘அமுதா ஓர் ஆச்சர்யக்குறி’ தொலைக்காட்சித் தொடர் உட்பட 4 நெடுந்தொடர்களில் நடித்துள்ளார்.
இயக்குநர் வீணை எஸ்.பாலச்சந்தரின் மகன் எஸ்.பி.எஸ் ராமனின் எஸ்.பி. கிரியேஷன்ஸ் குழுவின் ’அந்த நாள்’ திரைப்படத்தின் நாடக வடிவில் நடித்துள்ளார். மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக எழுதி, எஸ்.பி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பாரதியார் கதாப்பாத்திரம் ஏற்று 50-க்கும் மேற்பட்ட மேடைகளில் (அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மஸ்கெட், உட்பட) நடித்துள்ளார். [8]
பொதிகை தொலைக்காட்சிக்காக, கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் தயாரிப்பில் பாரதியார் வாழ்க்கையை 26 பகுதிகளாக எழுதி பாரதியாராக இந்த நெடுந்தொடரில் நடித்துள்ளார். [9]
படைப்புகள்
[தொகு]கவிதை நூல்கள் - 13
[தொகு]- கோடுகள் இல்லா உலகம்
- அகத்தியர் அந்தாதி
- மனோன்மணி மாலை
- ரமணனைக் கேளுங்கள் + குறுந்தகடு
- வண்டி போய்க்கொண்டிருக்கிறது + குறுந்தகடு
- மரியன்னை பதிகம்
- அராளகேசி அருட்பாமாலை
- ஸ்ரீ சாரதாம்பிகை பதிகம்
- துர்கா சப்தஸ்லோகி
- நதியில் விழுந்த மலர் + குறுந்தகடு
- அபிராமி அம்மை பதிகம்
- என்னுயிர் மீனாட்சியே
உரைநடை நூல்கள் - 20
[தொகு]- இமயம் : அந்தரங்கத்தின் பகிரங்கம்
- என் குருவே என் இறைவன்
- “சிகரம்” - இயக்குநர் “சிகரம்” - திரு, கே. பாலசந்தர் அவர்களின் வாழ்க்கை வரலாறு
- ஒளிமயமான எதிர்காலம்
- வெற்றி நிச்சயம்
- காலங்களில் அவன் வசந்தம்
- கண்ணதாசன் – இலக்கியத்தின் கண்ணாடி
- தெய்வப் பிறவிகள் (தினமலர் வெளியீடு)
- பாமரன் பார்வையில் பாரதி (தினமலர் வெளியீடு)
- ஈசாவாஸ்ய உபநிடத விளக்கம்
Books in English - 05
[தொகு]- Business Mantras, a Pictorial on Arutchelvar Sri N Mahalaingam published by Times of India
- Take Marriage Seriously (A Sublime Sacrament)
- Mahaprasthan
மேலும் 4 மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார்.
விருதுகள்
[தொகு]- கலைமாமணி விருது - தமிழக அரசு
- வாழும் பாரதி விருது - திருக்குறள் பாசறை, மஸ்கெட்
- பாரதி பணிச் செம்மல் - வடசென்னை தமிழ்ச் சங்கம்
- கவியரசு கண்ணதாசன் விருது - கண்ணதாசன் தமிழ்ச்சங்கம், பம்மல்
- USA Kalabushan - Golden Elephants, New Jersey
- சென்னை கம்பன் கழக விருது
- தமிழ்ச் சுடர் விருது - அம்பத்தூர் கம்பன் கழகம்
- பாரதி இலக்கியச் செல்வர்
- பாரதி விருது ஸ்ரீராம் குழுமம்
- பொற்றாமரை விருது
- நேதாஜி நாட்டுப் பற்றாளர் விருது
- Vocational Excellence Award from Rotary Club of Mambalam
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கலைமாமணி விருதுப் பட்டியல் - 2018" (PDF). 2025-03-09.
- ↑ "Konjam Kavithai Konjam Theneer on May2013 at Podhigai". 2014-10-03.
- ↑ "Pannisai Vithagargal - Makkal TV". 2021-05-06.
- ↑ "தர்மத்தின் பாதையில் - பாகம் 1 - On the Path of Dharma". 2017-04-24.
- ↑ "'காலங்களில் அவன் வசந்தம்' - சிறப்பு தொகுப்பு". 2023-08-19.
- ↑ இசைக்கவி ரமணனின் ‘ஆறுவது சினம்’ சொற்பொழிவு – பகுதி 1
- ↑ "பாரதி பார்வையில் கம்பன்". Archived from the original on 2011-03-03. Retrieved 2013-12-02.
- ↑ "பாரதி யார் - வரலாற்று நாடகம்". 2022-12-07.
- ↑ "Mahakavi Bharathi | TV Series on Tamil Poet Subramania Bharathi". 2024-01-17.