இரன்னி பெரிநாடு தடுப்பணை
| இரன்னி பெரிநாடு தடுப்பணை Ranni-Perinad Weir | |
|---|---|
| நாடு | இந்தியா |
| நிலை | செயலில் |
| திறந்தது | 2012 |
இரன்னி பெரிநாடு தடுப்பணை (Ranni-Perinad Weir) என்பது இந்தியாவின் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தின் இரன்னி பெரிநாடு கிராமங்களில் உள்ள மாம்பாறையில் பம்பை ஆற்றின் துணை நதியான கக்கட்டாறில் கட்டப்பட்ட ஒரு மாற்று அணையாகும்.[1] இந்த தடுப்பணை பைஞ்சுதை-ஈர்ப்பு வகையினைச் சார்ந்தது. இது இரன்னி - பெரிநாடு சிறு நீர் மின் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது. இது பம்பா படுகையில் உள்ள கக்கட்டாறு ஆற்றுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். 4.0 மெகாவாட் (2x 2.0 மெகாவாட்) மின் உற்பத்தித் திறனுடன் நிறுவப்பட்ட இந்த நிலையம் மணியாறு மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் நீரைப் பயன்படுத்தி, மின் உற்பத்தியினை மேற்கொள்கிறது. இந்த தடுப்பணையிலிருந்து கக்காடு ஆற்றுக்குத் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இது இரன்னி, கோன்னி, கோழஞ்சேரி, திருவல்லா, செங்கனூர், குட்டநாடு, மாவேலிக்கரா மற்றும் கார்த்திகைப்பள்ளி போன்ற வட்டங்கள் வழியாகப் பாய்கிறது. இந்த அணை இரன்னி-பெரிநாடு நீர் வழங்கல் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.[2]
விவரக்குறிப்புகள்
[தொகு]- அட்சரேகை: 9⁰ 21′ 00” வ
- தீர்க்கரேகை: 76⁰ 52′ 00” கி
- ஊராட்சி: இரன்னி - பெரிநாடு
- கிராமம்: இரன்னி-பெரிநாடு
- மாவட்டம்: பத்தனம்திட்டா
- ஆற்றுப் படுகை: பம்பா
- ஆறு: கக்கட்டாறு
- அணையிலிருந்து ஆற்றுக்கு நீர் வெளியீடு: கக்கட்டாறு
- நிறைவு ஆண்டு: 2012
- திட்டத்தின் பெயர்: இரன்னி-பெரிநாடு செப்
- அணை வகை: பைஞ்சுதை - ஈர்ப்பு
- வகைப்பாடு: தடுப்பணை
- அதிகபட்ச நீர்மட்டம் (MWL): உயர் மட்டம் 22.10 மீ
- முழு நீர்த்தேக்க நிலை (FRL) உயர் மட்டம்18.10 மீ
- FRL 1.0 Mm3-ல் சேமிப்பு
- ஆழமான அடித்தளத்திலிருந்து உயரம் 9.35 மீ
- நீளம்: 124 மீ
- கசிவு பாதை: கதவில்லா, வழிந்தோட்டம்
- உச்சி மட்டம்: உயர் மட்டம் 18.10 மீ
- ஆற்று வெளியீட்டு அளவு: வழங்கப்படவில்லை
இரன்னி பெரிநாடு சிறு நீர் மின் திட்டம்
[தொகு]இந்த திட்டம், கார்போராண்டம் யுனிவர்சல் நிறுவனத்தால் இயக்கப்படும் மணியாறு திட்டத்திற்கான கடைமடைத் திட்டமாகும். மின் உற்பத்திக்குப் பிறகு வெளியேற்றப்படும் உபரி நீர், மின் நிலையத்திலிருந்து பம்பை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
| நீர்ப்பிடிப்பு பகுதி | 288.283 ச.கி.கி.மீ.[3] |
| (8.283 சதுர கிமீ நீர்ப்பிடிப்பு மற்றும் மணியாறு திட்டத்தின் 280 சதுர கிமீ நீர்ப்பிடிப்பு) | |
| அமைவிடம் | |
| இடம் | மாம்பாறை |
| ஊராட்சு | இரன்னி பெருநாடு |
| வட்டம் | இரன்னி |
| மாவட்டம் | பத்தனம்திட்டா |
| நிறுவப்பட்ட திறன் | 4 மெகாவாட் (2 x 2 மெகாவாட்) |
| ஆண்டு தலைமுறை திறன் | 16.73 MU |
| முதன்மை இயக்கி | கிடைமட்ட தண்டு கப்லான் சுழலி |
| திட்டத்தின் நோக்கம் | நீர் மின்சக்தி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kerala State Electricity Board Limited - Pamba Basin HydroProjects". www.kseb.in. Retrieved 2021-07-28.
- ↑ "Home page of Pampa Parirakshana Samithy Kerala State India". www.savepampa.org. Archived from the original on 2021-07-28. Retrieved 2021-07-28.
- ↑ "Power development in Kerala: electricity projects and generation". www.expert-eyes.org. Retrieved 2021-07-28.