இரத்னா தேப்நாத்
இரத்னா தேப்நாத் | |
|---|---|
রত্না দেবনাথ | |
| சட்டமன்ற உறுப்பினர்-மேற்கு வங்காள சட்டமன்றம் பானிகாதி சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 4 மே 2026 | |
| முன்னையவர் | நிர்மல் கோசு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (since 2026) |
| பிள்ளைகள் | 1 (இறப்பு) |
| பணி | அரசியல்வாதி, சமூக சேவகர் |
| அறியப்படுவது | 2024 கொல்கத்தா பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் மகளை இழந்தவர் |
இரத்னா தேப்நாத் (Ratna Debnath) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் சமூக ஆர்வலரும் ஆவார். இவர் 2026ஆம் அண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பானிகாதி சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1] இவர் 2024-ல் கொல்கத்தா ஆர். ஜி. கர். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வழக்கில் பாதிக்கப்பட்டவரின் தாயாக பொது கவனத்திற்கு வந்தார். இது மேற்கு வங்கத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நீதி குறித்து பொது ஆர்ப்பாட்டங்களுக்கும் விவாதத்திற்கும் வழிவகுத்தது.[2][3]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இரத்னா தேப்நாத் 2024 கொல்கத்தா இரா. கோ. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வழக்கில் பாதிக்கப்பட்டவரின் தாய் ஆவார்.[4] இவரது ஒரே மகள் இம்மருத்துவ மனையில் பயிற்சி மருத்துவராக பணியிலிருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.[5][6] இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவருக்கு நீதி கோரி மருத்துவத் துறையினராலும், பொது மக்களாலும் மாநிலத்தில் பரவலான போராட்டம் நடைபெற்றது. விசாரணையில் அதிருப்தியை வெளிப்படுத்திய குடும்பத்தினர், தங்கள் மகளுக்கு நீதி மறுக்கப்பட்டதாகக் கூறினர். 2025ஆம் ஆண்டில், தேப்நாத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும், தனது மகளுக்கு நீதி பெறுவதற்காக அரசியலில் நுழைய விரும்புவதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பாஜக இவருக்குச் சீட்டு வழங்கிது. தேப்நாத்தின் கல்வித் தகுதிக்காக மேற்கு வங்காள ஆளும் கட்சியின் அரசியல்வாதிகளால் விமர்சிக்கப்பட்டார். இருப்பினும் இது பொது மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை.[7] இரத்னா தேப்நாத் படிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது.[8]
அரசியல் வாழ்க்கை
[தொகு]2026ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பானிகாதி சட்டமன்றத் தொகுதி பாஜக கட்சி தனது வேட்பாளரக தேப்நாத்தை அறிவித்தது.[9][10][11] தனது பிரச்சாரத்தின் போது, பெண்களின் பாதுகாப்பு மற்றும் நீதி தனது முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்று தேப்நாத் கூறினார்.[12][13] பிரதமர் நரேந்திர மோதி, முன்னாள் மத்திய அமைச்சர் சுமிருதி இரானி, திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லாப் தேப், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் இவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர்.[14] வேட்பு மனுவை தாக்கல் செய்யும் போது ஆளும் கட்சியின் ஆதரவாளர்களால் துன்புறுத்தப்பட்டதாகவும் மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. [15] 2026 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பானிகாதியிலிருந்து தேப்நாத் வெற்றி பெற்றார், இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் தீர்த்தங்கர் கோசைத் தோற்கடித்தார்.[16]
பொது வாழ்வில்
[தொகு]இரத்னா தேப்நாத், வேட்பு மனு உறுதி செய்யப்பட்ட பின்னர், ஊடக உரையாடலில், தனது மகளுக்கு நீதி கிடைக்கும் வரை, அப்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி நீக்கம் செய்யப்படும் வரை தனது தலைமுடியை சீவ மாட்டேன் என்று கூறினார்.[17] இவரது வேட்பு மனு அடையாளப்பூர்வமாக முக்கியத்துவம் வாய்ந்தது என்று வர்ணனையாளர்கள் விவரித்தனர்.[2][18] ஏனெனில் இது மேற்கு வங்கத்தில் நீதி, பொதுப் பாதுகாப்பு மற்றும் தேர்தல் அரசியல் போன்ற பிரச்சினைகளை இணைத்தது. 2024 கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வழக்கு மற்றும் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட தேப்நாத் எடுத்த முடிவு ஆகியவை அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு மற்றும் மம்தா பானர்ஜியின் இழப்புக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும். இந்தத் தேர்தலில், மொத்தமுள்ள 293 தொகுதிகளில், 207 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.[19]
தேர்தல் செயல்பாடு
[தொகு]| ஆண்டு | தொகுதி | கட்சி | வாக்குகள் | % | இரண்டாமிடம் | கட்சி | வாக்குகள் | % | வித்தியாசம் | முடிவு | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 2026 | பானிகாதி | பாரதிய ஜனதா கட்சி | 87,977 | 59.8 | தீர்த்தங்கர் கோஷ் | AITC | 59,141 | 40.2% | 28,836 | வெற்றி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BJP releases Bengal candidate list, names Ratna Debnath from Panihati". The Hindu. 25 March 2026. https://www.thehindu.com/.
- 1 2 "All About Ratna Debnath, Mother Of RG Kar Victim, Contesting For BJP From Panihati". NDTV. 22 April 2026. https://www.ndtv.com/india-news/bengal-elections-2026-ratna-debnath-mother-of-rg-kar-victim-contesting-on-bjp-ticket-from-panihati-11392072.
- ↑ "RG Kar case becomes major issue in Bengal politics". India Today. 2026. https://www.indiatoday.in/.
- ↑ Desk, India Today News (2026-05-04). "Ratna Debnath, RG Kar victim's mother and BJP candidate, wins Bengal elections". India Today (in ஆங்கிலம்). Retrieved 2026-05-05.
{{cite web}}:|last=has generic name (help) - ↑ https://www.bbc.com/news/articles/crmwj4z1xpko
- ↑ Chatterjee, Moyurie Som & Shrabana (2025-06-07). "R.G. Kar case: Parents of deceased doctor express dissatisfaction with CBI probe" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/west-bengal/rg-kar-case-parents-of-deceased-doctor-express-dissatisfaction-with-cbi-probe/article69669184.ece.
- ↑ "Ratna Debnath(Bharatiya Janata Party(BJP)):Constituency- PANIHATI(NORTH 24 PARGANAS) - Affidavit Information of Candidate:". www.myneta.info. Retrieved 2026-05-05.
- ↑ "Ratna Debnath(Bharatiya Janata Party(BJP)):Constituency- PANIHATI(NORTH 24 PARGANAS) - Affidavit Information of Candidate:". www.myneta.info. Retrieved 2026-05-05.
- ↑ "West Bengal polls: RG Kar victim’s mother Ratna Debnath gets BJP ticket from Panihati". The Times of India. 25 March 2026. https://timesofindia.indiatimes.com/india/west-bengal-polls-rg-kar-victims-mother-ratna-debnath-gets-bjp-ticket-from-panihati/articleshow/129804969.cms.
- ↑ "WB Assembly Elections: Mother of RG Kar victim gets BJP candidature from Panihati constituency". Akashvani News. 26 March 2026. https://www.newsonair.gov.in/wb-assembly-elections-mother-of-rg-kar-victim-gets-bjp-candidature-from-panihati-constituency/.
- ↑ "BJP names Ratna Debnath in Bengal poll list". Hindustan Times. 26 March 2026. https://www.hindustantimes.com/.
- ↑ "West Bengal polls: RG Kar victim’s mother files nomination, says women’s safety a priority". The Times of India. 9 April 2026. https://timesofindia.indiatimes.com/city/kolkata/rg-kar-mother-files-papers-says-womens-safety-a-priority/articleshow/130151117.cms.
- ↑ "Ratna Debnath campaigns on women's safety agenda". The Telegraph. 2026. https://www.telegraphindia.com/.
- ↑ Das, Anupreeta; Das, Hari KumarAnupreeta; candidate, Hari Kumar spoke with the; Kolkata, her supporters as they campaigned door to door in (2026-04-30). "Her Daughter Was Raped and Killed. Now She’s Seeking Office — and Justice." (in en-US). The New York Times. https://www.nytimes.com/2026/04/30/world/asia/india-elections-bjp-ratna-debnath.html.
- ↑ "'TMC goons tried to attack me, threatened me over May 4': BJP’s Ratna Debnath amid West Bengal Phase 2 polling". The Economic Times. 2026-04-29. https://economictimes.indiatimes.com/news/elections/assembly-elections/west-bengal/bjp-candidate-ratna-debnath-alleges-attack-by-tmc-goons-amid-voting-in-west-bengal-elections/articleshow/130602096.cms?from=mdr.
- ↑ Rajput, Kajal (2026-05-04) (in en). West Bengal Assembly Polls 2026: Ratna Debnath, RG Kar victim's mother leads in Panihati. https://medicaldialogues.in/state-news/west-bengal/west-bengal-assembly-polls-2026-ratna-debnath-rg-kar-victims-mother-leads-in-panihati-169932.
- ↑ ""Won't comb my hair till my daughter gets justice": Mother of RG Kar rape victim 'vows' to defeat Mamata Banerjee in polls". ANI News (in ஆங்கிலம்). Retrieved 2026-05-05.
- ↑ "Ratna Debnath candidature seen as symbolic BJP move". The Economic Times. 2026. https://economictimes.indiatimes.com/.
- ↑ Ellis-Petersen, Hannah (2026-05-04). "Narendra Modi’s BJP wins election in West Bengal for the first time" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/world/2026/may/04/modis-bjp-party-win-election-west-bengal-first-time.