உள்ளடக்கத்துக்குச் செல்

இரத்னவர்ம எக்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்மசாலா இரத்னவர்ம எக்டே
சுய தரவுகள்
பிறப்பு
சமயம்சைனம்
பதவிகள்
Based inதர்மஸ்தலா, கருநாடகம், Iஇந்தியா
பதவிக்காலம்1955–1968
முன் இருந்தவர்மஞ்சையா எகடே
பின் வந்தவர்வீரேந்திர எக்டே
Postதர்மசாலா கோவிலின்
தர்மதிகாரி

தர்மஸ்தலா இரத்னவர்மா எக்டே (Dharmasthala Ratnavarma Heggade) இவர் ஓர் இந்தியக் கல்வியாளரும், சட்டமன்ற உறுப்பினரும், அறப்பணிகளை செய்தவரும் ஆவார். இவர் 1955 முதல் 1968 வரை தர்மசாலா மஞ்சுநாதர் கோயிலின் பரம்பரை நிர்வாகி (தர்மதிகாரி) என்ற பெயரில் மிகவும் பிரபலமானவர்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர், பெர்கடே என்ற ஒரு குடும்பத்தில் 1889 ஆம் ஆண்டு, தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயிலின் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் கோயில் நகரமான தர்மஸ்தலாவின் நிலப்பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தார். இவர்மங்களூரில் தனது கல்வியை முடித்தார் [2] இவர் முடபித்ரியைச் சேர்ந்த ஒரு செல்வந்த நில உரிமையாளர் சங்கப்ப செட்டியின் மகள் ரத்னம்மா என்பவரை மணந்தார் . இந்த தம்பதியினருக்கு வீரேந்திரன், சுரேந்திரன், அரிச்சந்திரன், இராஜேந்திரன் என்ற நாங்கு மன்களும் பத்மலதா என்ற ஒரு மகளும் இருந்தனர்.[3]

தொழில்[தொகு]

இவரது பொது வாழ்க்கை 1955 இல் அவரது மாமா மஞ்சையா எகடே இறந்த பிறகு ஏற்றுக்கொண்ட தர்மதிகாரிப் பதவியில் தொடங்கியது. இவர் தர்மசாலா கிராமத்தை நவீன நகரமாக மாற்றி, நிலத்தையும் கட்டிடங்களையும் எழுப்பினார். இந்த காலகட்டத்தில் கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்காக இவர் ஒரு கல்வி அறக்கட்டளையையும் நிறுவினார். இவர் 1957 மற்றும் 1962 முதல் கர்நாடக சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[4] வேனூர், கார்காலா மற்றும் சரவணபெலகோளா போன்ற யூர்களில் அமைந்துள்ள பாகுபலியின் சிலையை அமைக்கும் திட்டத்தையும் தொடங்கினார். 1968 ஆம் ஆண்டில் இவரது மகன் வீரேந்திர எக்டேவின் அகால மரணத்திற்குப் பிறகு இந்த திட்டத்தை எடுத்துக் கொண்டு பாகுபலி சிலைத் திட்டத்தை முடித்தார்.

மரபு[தொகு]

இவரது நினைவாக துளு நாடக விருது ஒன்று ஏற்படுத்தப்பட்டது. துளு மொழி மாத இதழான துளுகூட்டா நிதியுதவி வழங்கும் நாடகம் எழுதும் போட்டியின் போது ஒவ்வொரு ஆண்டும் பரிசு வழங்கப்படுகிறது.[5] தர்மசாலைக்கு அருகிலுள்ள உஜ்ஜிரேவில் உள்ள ஒரு அரங்கத்திற்கும் இவரது பெயரிடப்பட்டது.[6][7]

குறிப்புகள்[தொகு]

  1. Bureau, Bhat R.K. "Dharmasthala - Promoting Universal Peace and Brotherhood". Mangalorean.com. Archived from the original on 11 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 28 September 2010.
  2. Shet Saldanha, I.J. "Fight for Survival". Mangalore Today. பார்க்கப்பட்ட நாள் 28 September 2010.
  3. Daijiworld News Network. "Matrushri Ratnamma Heggade". Daiji world. Archived from the original on 11 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 28 September 2010.
  4. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1957 TO THE LEGISLATIVE ASSEMBLY OF MYSORE" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 11 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 28 September 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Applications invited for drama award". தி இந்து (Chennai, India). 5 July 2004 இம் மூலத்தில் இருந்து 20 டிசம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041220231116/http://www.hindu.com/2004/07/25/stories/2004072510060300.htm. பார்த்த நாள்: 2 November 2008. 
  6. "VTU athletic meet begins on Wednesday". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-06-29 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130629121653/http://articles.timesofindia.indiatimes.com/2009-11-10/hubli/28104577_1_vtu-engineering-colleges-engineering-and-technology. பார்த்த நாள்: 10 November 2009. 
  7. "Tulu convention off to colourful start at Ujire". தி இந்து (Chennai, India). 11 December 2009 இம் மூலத்தில் இருந்து 16 டிசம்பர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091216112000/http://www.hindu.com/2009/12/11/stories/2009121155800300.htm. பார்த்த நாள்: 11 December 2009. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்னவர்ம_எக்டே&oldid=3927766" இலிருந்து மீள்விக்கப்பட்டது