இரத்னமாலா (நடிகை)
இரத்னமாலா | |
---|---|
பிறப்பு | கமல் பிவாந்த்கர் 1924 |
இறப்பு | சனவரி 24, 1989 | (அகவை Expression error: Unrecognized punctuation character "–".–64–65)
தேசியம் | {[Ind}] |
பணி | நடிகை |
வாழ்க்கைத் துணை | இராஜா பண்டிட் |
இரத்னமாலா (Ratnamala) (பிறப்பு: கமல் பிவாந்த்கர் 1924-24 ஜனவரி 1989) ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார்.[1] மராத்தி மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் தனது பாத்திரங்களுக்காக அறியப்பட்ட இவர், குறிப்பாக தாதா கோண்ட்கேவின் திரைப்படங்கள் முழுவதும் தொடர்ந்து அவரது தாயாராக நடித்ததற்காக, “தாதா கோன்ட்கேவின் தாய்” என்ற சிறப்பு பட்டத்தைப் பெற்றார்.[2]
தொழில் வாழ்க்கை
[தொகு]1938 ஆம் ஆண்டில், தனது பதினான்காவது வயதில், கமல் பிவாந்த்கர் என்ற திரைப் பெயரில் பாக்வா ஜெண்டா என்ற மராத்தி படத்தில் நடித்தார். பின்னர் இவரது பெயர் இரத்னமாலா என்று மாற்றப்பட்டது. அதன்பிறகு, மாசி லட்கி (1939) என்ற படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக நடித்தார். பின்னர், ஸ்டேஷன் மாஸ்டர் என்ற படம் மூலம் இந்தித் திரையுலகில் அறிமுகமானார்.
இவரது பிரபலமான சில முக்கிய மராத்தி திரைப்படங்கள் பின்வருமாறு.ருக்மிணி சுயம்வர் (1946), மாசா ராம் (1949) ,கோகுல்சா ராஜா (1950), ராம்ராம் பவனா (1950) சங்கத்தே ஐகா (1959), மணினி (1961), கோர்டாச்சி பயாரி (1970), ரங்கபஞ்சமி (1961), காளி பைகோ (1970), மும்பைச்சா ஜவாய் (1970) .
1971 ஆம் ஆண்டில் தாதா கொண்ட்கேவின் முதல் மராத்தி படமான சொங்கத்யா படத்தில் அவரது தாயாக இத்னமாலா திரையில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, ஏக்தா ஜீவ் சதாஷிவ் (1972), ஹரியா நார்யா ஜிந்தாபாத் (1972), தபட்யா (1973), பாண்டு ஹவல்தார் (1975), ப்ரீத் துழி மாஜி (1975), ராம் ராம் கங்காரம் (1977), போட் லவீன் தித் குட்குல்யா (1978), லட்சுமி (1978), ஹையோச் நவ்ரா பாஹிஜே (1980), அலி அங்கவர் (1982), நவ்ரே சாகல் காதவ் (1982), தகலா லக்லி கல் (1985), மற்றும் முக்கா க்யா முக்கா (1987) போன்ற படங்களில் நடித்தார்.[3]
சொந்த வாழ்க்கை
[தொகு]இரத்னமாலா இராஜா பண்டிட் என்பவரை மணந்தார்.[3] 1989 ஜனவரி 23 அன்று இறந்தார்.[3]{
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "MGR Remembered – Part 67 – Ilankai Tamil Sangam". sangam.org. Archived from the original on 2024-04-26. Retrieved 2024-04-26.
- ↑ "आये..." Maharashtra Times (in மராத்தி). Archived from the original on 2024-04-26. Retrieved 2024-04-26.
- ↑ 3.0 3.1 3.2 "Ratnamala". Cinemazzi. Archived from the original on 2023-10-02. Retrieved 2024-04-26.