இரத்த விதி
இரத்த விதி (Blood rule) என்பது பல விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் ஒரு விதியாகும். ஒரு வீரர் காயமடைந்து இரத்தம் சிந்தும் போது, அவரை தற்காலிகமாக விளையாட்டிலிருந்து வெளியேற்றி, இரத்தம் நிறுத்தப்பட்ட பின் மட்டுமே மீண்டும் அனுமதிக்கும் விதியாகும். பொதுவாக ஒரு விளையாட்டு வீரர் காயம் அடைந்தாலோ, இரத்தப்போக்கு ஏற்பட்டாலோ, அல்லது அவர்களின் உடைகளில் இரத்தக் கறை இருந்தாலோ, உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற விளையாட்டுப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று இவ்விதி கூறுகிறது.[1] அவர்கள் பின்னர் மீண்டும் விளையாட முடிந்தாலும், காயம் சரியாகும் வரை, இரத்தப்போக்கு நிற்கும் வரை, மற்றும் அனைத்து மாசுபட்ட உபகரணங்களும் மாற்றப்படும் வரை அவர்களால் விளையாட்டைத் தொடர முடியாது..[2] இந்த விதிகளால் கவனிக்கப்படும் முக்கிய கவலை தொற்று நோய்கள் பரவுவதாகும்.
இவ்விதி பயன்படுத்தப்படும் சில விளையாட்டுகள் ஆத்திரேலிய கால்பந்து விதிகள்,[3] சப்பான் தேசிய கல்லூரி தடகள சங்க அடிபந்தாட்டம்[4] மற்றும் சில முக்கிய அமெரிக்க விளையாட்டு கூட்டமைப்பு போட்டிகள் ஆகியனவாகும்.
உதாரணமாக, ஆத்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெறும் தேசிய ரக்பி போட்டியில், வீரரின் மருத்துவ ஊழியர்கள் காயத்திற்கு சிகிச்சையளிக்கும் போது ஆட்டம் நிறுத்தப்படும். நடுவரின் திருப்திக்கு ஏற்ப இரத்தப்போக்கு நிறுத்தப்படாவிட்டால், வீரர் காயத்தில் மேலும் கவனம் செலுத்த மைதானத்தை விட்டு வெளியேற வேண்டும். கூட்டமைப்பு கால்பந்து போன்ற விளையாட்டுகளில், ஒரு வீரர் உடனடியாக மாற்றப்படாமல் மைதானத்தை விட்டு வெளியேறலாம். அவர் மீண்டும் விளையாட்டில் நுழையும் வரை, மாற்றப்படும் வரை அல்லது போட்டி முடியும் வரை (காயம் திருப்திகரமாக குணமடைய முடியாவிட்டால் மற்றும் அணி மாற்று வீரர்களுக்கு வெளியே இருந்தால்) அவரது அணி அவரில்லாமல் விளையாடலாம்.
இரத்தம் வழியாக நோய்கள் பரவாமல் தடுப்பதும், பிற வீரர்களின் உடல் நலத்தைப் பாதுகாப்பதும், காயமடைந்த வீரருக்கு சிகிச்சை அளிக்க நேரம் கிடைக்க வழியேற்படுத்தவும் இரத்த விதி முக்கியத்துவம் பெறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Blood Rule". Melbourne City Sports. Archived from the original on 2007-06-24. Retrieved 2007-07-02.
- ↑ "The Blood Rule". Smartplay. Archived from the original on 2007-06-16. Retrieved 2007-07-02.
- ↑ "Frequently Asked Questions about Australian Rules Football". Footy.com.au. Archived from the original on 2010-02-19. Retrieved 2007-07-02.
- ↑ "2004 Baseball Rules Changes and Points of Emphasis" (PDF). NCAA. Archived from the original (PDF) on 2007-09-30. Retrieved 2007-07-02.