இரத்தினபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரத்தினபுரம் எனப்படுவது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை வட்டத்திற்குட்பட்ட அனந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள கிராமமாகும். இங்கே முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது.

சேவைகள்[தொகு]

விவசாயம்[தொகு]

நெல் ,தென்னை, வாழை ,மா, பலா, முந்திரி, பனை முதலியன இங்கு பயிரிடப்படும் முக்கியமான பயிர் வகைகள் ஆகும்.

கல்வி[தொகு]

அரசு அங்கன்வாடி மற்றும் அரசு ஆரம்பப் பள்ளி முதலிய பாடசாலைகள் உள்ளன.

தபால்[தொகு]

இங்கு அமைந்துள்ள தபால் நிலையம், திடல் பஞ்சாயத்திற்குட்பட்ட திடல், மேலத்திடல், தெற்குமேடு, நயினார்தோப்பு, கடம்படிவிளாகம் போன்ற கிராமங்களுக்கு தபால்சேவை செய்து வருகிறது.

போக்குவரத்து[தொகு]

இங்கிருந்து மாவட்டத் தலைநகரான நாகர்கோவிலுக்குத் தமிழ்நாடு அரசு பேருந்துக் கழகப் பேருந்துகள் போக்குவரத்துச் சேவை செய்கின்றன.

சமயம்[தொகு]

இக்கிராமத்தில் வசிப்போரில் பெரும்பான்மையானோர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்களாகையால் இங்கு இரட்சணிய சேனை தேவாலயம் ஓன்று அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தினபுரம்&oldid=1977191" இருந்து மீள்விக்கப்பட்டது