உள்ளடக்கத்துக்குச் செல்

இரத்தம் தண்ணீரை விட அடர்த்தியானது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரத்தம் தண்ணீரை விட அடர்த்தியானது (Blood is thicker than water) என்பது ஒரு ஆங்கிலப் பழமொழியாகும். இதற்கு ஒத்த தமிழ்ப் பழமொழியாக தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதைக் குறிப்பிடலாம். இரத்தம் தண்ணீரை விட அடர்த்தியானது என்னும் இந்தப் பழமொழி, குடும்ப உறவுகள் எப்போதும் மற்ற உறவுகளைவிட வலிமையானவையாக இருக்கும் என்பதைச் சொல்ல பயன்படுத்தபடுகிறது. இப்பழமொழிக்கான மிகப் பழமையான குறிப்பை, 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ஜெர்மானிய ஆவணத்தில் உள்ளது. [1]

வரலாற்றுப் பார்வைகள்

[தொகு]

ஜெர்மன் மொழியில் இதே போன்ற ஒரு பழமொழி, ஹென்ரிச் டெர் க்ளிசெசேர் எழுதிய இடைக்கால ஜெர்மன் காவியமான ரெய்ன்ஹார்ட் ஃபூக்ஸில் (சுமார் 1180; ஆங்கிலம்: ரெய்னார்ட் தி ஃபாக்ஸ் ) வேறு வடிவத்தில் முதலில் தோன்றியது. 13 ஆம் நூற்றாண்டின் ஹைடெல்பெர்க் கையெழுத்துப் பிரதியில் ஒரு பகுதி இவ்வாறு கூறுகிறது, " ouch hoer ich sagen, das sippe blůt von wazzere niht verdirbet ". ஆங்கிலத்தில் இது, "உறவினர் இரத்தம் தண்ணீரால் கெட்டுப்போகாது என்றும் நான் கேள்விப்பட்டேன்" என்று கூறுகிறது. வேறு எங்கும் காணப்படாத இந்தப் பழமொழி, குடும்ப இரத்த உறவுகள் ஞானஸ்நானத்தின் நீரால் அழிக்கப்படுவதில்லை என்பதைக் குறிக்கிறது என்றும், அதனால் காகமான டைசெலின் ஞானஸ்நானம் பெற்றிருந்தபோதிலும் தன் தந்தையின் கண்ணோட்டத்தைப் பெற்றிருக்கும் என்றும் ஜேக்கப் கிரிம் கூறுகிறார். [2]

1412-இல், ஆங்கிலேய பாதிரியார் ஜான் லிட்கேட், டிராய் புக் ' என்ற நூலில், "இயற்கையாகவே, இரத்தம் தன் இனத்தைச் சார்ந்த மற்றொரு இரத்தத்தை எங்கு கண்டாலும், அதை நோக்கி ஈர்க்கப்படும்." [1][3]

வில்லியம் ஜென்கின் 1652 ஆம் ஆண்டு சொற்பொழிவில் இந்தப் பழமொழியை அதன் நவீன வடிவத்தில் குறிப்பிட்டார்: "இரத்தமே நீரைவிடச் செறிவானது (அதாவது நெருக்கமானது) என்று நாம் கூறுவதுண்டு; உண்மையில், நம் நண்பர்கள் அல்லது பிள்ளைகள் எவரையேனும் கிறித்துவின் இரத்தம் அலங்கரிக்குமாயின், நமக்கும் அவர்களுக்கும் இடையே வெறும் 'நீர் போன்ற' இயல்பான உறவு மட்டுமே கொண்டிருப்பவர்களைவிட, இவர்களுக்கே நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்." [4]

இந்தப் பழமொழி பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஸ்காட்லாந்து எழுத்தாளர்களின் பல இலக்கியப் படைப்புகளில் காணப்படுகிறது. ஜான் மூரின் ஜெலூகோ (1789) இல், ஒரு கதாபாத்திரம் மற்றொருவருக்கு எழுதும் ஒரு கடிதத்தில், தனது பழைய நண்பர்களை மறப்பதில் சிறிதும் ஆபத்து இல்லை என்றும், "என் ரத்த உறவுகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்; ஏனெனில் ரத்த உறவுகளே நீரை விட வலிமையானவை" என்றும் உறுதியளிக்கிறது. [5] கிறிஸ்டியன் ஐசோபெல் ஜான்ஸ்டோனின் ஸ்காட்லாந்து காதல் புதினமான, கிளான்-ஆல்பின்: எ நேஷனல் டேல் (1815) இல், ஃபுளோரா என்ற கதாபாத்திரம் "அதிகபட்சம் இரத்தக் கலப்பு கொண்டவள்" என்று கருதப்படுகிறது, ஆனால் ஒரு தூரத்து உறவினர், "ரத்த உறவுதான் தண்ணீரை விட வலிமையானது... மான்சிவார் நதியில் உள்ள தண்ணீர் முழுவதும் கூட அவளிடமிருந்து எங்கள் ரத்தத்தைக் கழுவ முடியாது" என்று குறிப்பிடுகிறார். [6] இந்த சொற்றொடர் அல்லது அதன் சில மாறுபாடுகள் சர் வால்டர் ஸ்காட்டின் மார்மியோன் (1808), [7] ராப் ராய் (1817), [8] மற்றும் கை மேனரிங் (1815) உள்ளிட்ட பல படைப்புகளில் காணப்படுகின்றன. [9] இந்தப் பழமொழி ஆங்கில சீர்திருத்தவாதி தாமஸ் ஹியூஸின் டாம் பிரவுன்ஸ் ஸ்கூல் டேஸ் (1857) இல் காணப்படுகிறது.

பிற விளக்கங்கள்

[தொகு]

உறவினர்கள் அல்லது குடும்ப உறவுகளைக் குறிக்க இரத்தம் என்றச் சொல்லைப் பயன்படுத்துவது கிரேக்க மற்றும் ரோமானிய மரபுகளிலேயே வேரூன்றியுள்ளது. [10] இந்தச் சொல்லின் பயன்பாடு 1300 களின் பிற்பகுதியில் இருந்து ஆங்கிலம் பேசும் பகுதிகளில் காணப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Speake, Jennifer; Simpson, John, eds. (2008). Oxford Dictionary of Proverbs (fifth ed.). Oxford University Press. p. 31. ISBN 978-0-19953953-6.
  2. Grimm, Jacob (1834). Reinhart Fuchs. Berlin: Reimer.
  3. Lydgate, John (1998). Edwards, Robert R. (ed.). Troy Book: Selections. Vol. Book 3. Medieval Institute Publications. ISBN 978-1-87928-899-7. Retrieved 2022-04-16.
  4. Jenkyn, William (1653). An exposition of the Epistle of Jude, together with many large and useful deductions. Lately delivered in XL lectures in Christ-Church London, by William Jenkyn, Minister of the Gospel of Jesus Christ. Vol. The first part (2nd ed.). London. p. 25.
  5. Moore, John (1789). "LXXII. Buchanan's Letter". Zeluco. Vol. II (2nd ed.). A. Strahan; T. Cadell. p. 141. Retrieved 21 July 2021. blood is thicker than water.
  6. Johnstone, Christian Isobel (1815). Clan-Albin: A National Tale. Edinburgh. p. 32.
  7. Eric (1863). "Blood is Thicker than Water". Notes and Queries 3 (17): 367. https://archive.org/details/sim_notes-and-queries_1863-05-09_3_71/page/366/mode/2up?q=Blood+. பார்த்த நாள்: 29 October 2022.
  8. Scott, Walter (1896). The Waverley Novels: Rob Roy. London: Adam & Charles Black. p. 211.
  9. Rogers, James T (1985). The Dictionary of Clichés. New York: Ballantine Books. p. 34. ISBN 978-0-345-33814-3.
  10. "Blood", Online Etymology Dictionary