உள்ளடக்கத்துக்குச் செல்

இரத்தன் ககார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரத்தன் ககார்
பிறப்புபாந்திருபன் கெந்துலி, பிர்பூம் மாவட்டம், வங்காள மாகாணம், இந்தியா (தற்போது மேற்கு வங்காளம்)
தேசியம்இந்தியா இந்தியர்
பணிஜூமர், பாது இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாட்கர்
செயற்பாட்டுக்
காலம்
1964–முதல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்Boroloker Biti Lo[1]
வாழ்க்கைத்
துணை
சாந்தி ககார்
விருதுகள்பத்மசிறீ (2024)

இரத்தன் ககார் (Ratan Kahar) என்பவர்இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த பத்மசிறீ விருது பெற்ற நாட்டுப்புறப் பாடகர் ஆவார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

இரத்தன் ககார் (பிறப்பு 1935) இந்தியாவின் கிராமப்புற வங்காளத்தின் பாது மற்றும் ஜுமுர் பாடல்களின் மூத்த நாட்டுப்புறப் பாடகர் ஆவார். 2024-ஆம் ஆண்டில் இந்திய அரசு நாட்டின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.[2] இவரது புகழ்பெற்ற பாடலான போரோலோக்கர் பிட்டி லோ 1972-இல் சுவப்னா சக்ரவர்த்தியின் குரலில் பிரபலமடைந்தது.[3] பிரபல ராப் கலைஞர் பாட்ஷா 2020-ஆம் ஆண்டில் தனது "கெண்டா புல் " பாடலை வெளியிட்டபோது, இந்தப் பாடலின் அசல் வரியான லால் கெண்டா புல் சர்ச்சையை ஏற்படுத்தியது.[4] இந்தச் சர்ச்சையின் காரணமாக, இரத்தன் ககாரின் இசை உருவாக்கம், சாதனைகள், பாடல்கள், கலைத்திறன் ஆகியவை முன்னுக்கு வந்தன. பாட்சா ககாருக்கு ஐந்து லட்சம் ரூபாயினைக் காப்புரிமைத் தொகையாகக் கொடுத்து சர்ச்சையைத் தீர்த்தார்.[5]

வெளியிடப்பட்ட படைப்புகள்

[தொகு]

ககாரின் மற்ற வங்காளப் பாடல்கள்:

  • தீதி ஜானோ கி கோ ஜானோ நா
  • பலா ரே பலா ரே ராவணன்
  • ⁠தேலே டி மால் கரிதா சப்பாபோ பஸ்தா
  • அக்ரனேதே நபான் கேதே அமர் பந்து கேனோ எலோ நா

விருதுகள்

[தொகு]
இந்தியக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் பத்மசிறீரீ விருதை பெறும் இரத்தன் ககார்

2024-ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு நாட்டின் நான்காவது உயரிய குடிமை விருதான பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்தது.[6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "My condition was very bad but I still received Padma Shri": Singer Ratan Kahar on being conferred with Padma Shri". திபிரிண்ட். 26 January 2024. Retrieved 2024-02-29.
  2. "Padma Awards 2024 announced (in English)". Retrieved 2024-01-27.
  3. "The Folk Origin Story Of Badshah And Jacqueline's 'Genda Phool' Is Unsettling". 30 March 2020. Retrieved 2024-03-02.
  4. "Here's everything to know about Badshah's Genda Phool controversy". 4 April 2020. Retrieved 2024-03-02.
  5. "Genda Phool row: Badshah pays Rs 5 lakh to Ratan Kahar, folk singer happy to be credited for song". 8 April 2020. Retrieved 2024-03-02.
  6. "Padma Award Dashboard". Retrieved 2024-03-02.
  7. "Haven't received any recognition from state: Bengal's Padma Shri recipient". Retrieved 2024-03-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தன்_ககார்&oldid=4378539" இலிருந்து மீள்விக்கப்பட்டது