இரத்தன்சந்த் இராச்சந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரத்தன்சந்த் இராச்சந்த் தோசி (Ratanchand Hirachand) (1902-1981) இவர் வால்சந்த் குழுமத்தின் வாரிசும், ஒரு பிரபல தொழிலதிபரும், அறக்காரியங்களில் ஈடுபட்டவரும், சுதந்திர போராட்ட வீரரும், சமண சமூகத் தலைவருமாவார். [1] [2]

இவர் இராச்சந்த் தோசியின் இரண்டாவது திருமணத்தின் மூலம் பிறந்த இரண்டாவது மகனும், வால்சந்த் இராச்சந்தின் சகோதரருமாவார். இவர் மகாராட்டிராவின் சோலாப்பூரில் குசராத்தி வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சமணக் குடும்பத்தில் பிறந்தார். குலாப்சந்த் இராச்சந்த் ,லால்சந்த் இராச்சந்த் ஆகிய இருவரும் இவரது சகோதரர்கள் ஆவர். [1]

இவர் வளர்ந்தபோது, தனது சகோதரர் வால்ச்சந்துடன் சேர்ந்து, சிந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி லிமிடெட், வால்ச்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ், இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட், ராவல்கான் சர்க்கரை ஆலை, இந்துஸ்தாண் கன்ஸ்ட்ரக்சன், பிரீமியர் ஆட்டோமொபைல்ஸ் போன்ற பல்வேறு குழும நிறுவனங்களில் பணிபுரிந்தார். 1931 ஆம் ஆண்டில், வால்சந்த் இந்தியன் ஹியூம் பைப்பை கைப்பற்றும்போது, இவரை அதன் இயக்குநராக நியமித்தார். [1] மேலும், இவர் பல ஆண்டுகளாக கூப்பர் இன்ஜினியரிங் வால்சந்த் குழுவின் தலைவராக இருந்தார். [3]

இவர் 1940 தசாப்தத்தில் பல்வேறு குழுக்களிலும், திட்டமிடல் ஆணையத்திலும் பணியாற்றினார். [4]

மேலும், இவர் சமண மதம் குறித்த பல புத்தகங்களை வெளியிட்டார். அதில் 1957 இல் வெளியிடப்பட்ட தி ரிலிஜன் ஆப் அஹிம்சா என்ற புத்தகம் குறிப்பிடப்பட்டுள்ளது. [5] இவர் மராத்தியிலும், இந்தி மொழியிலும், தனது தந்தை சேத் இராச்சந்த் நெம்சந்த், தினநாத் பாபுஜி, மகுட்கர் போன்றவர்களின் சுயசரிதைகளையும் வெளியிட்டார். [6]

வால்சந்த் குழுமத்தால் நடத்தப்படும் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளின் அறங்காவலராகவும் இருந்தார். [7]

இவரது மகன் ராஜாஸ் தோசி, பல வால்சந்த் குழு நிறுவனங்களில் இயக்குநராக உள்ளார். [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Business Legends – Gita Piramal. 1999. பக். 156, 168, 219, 276, 280, 300, 612. https://books.google.com/books?id=Gt5WXOQ08DYC&pg=PA639&lpg=PA639&dq=gulabchand+hirachand+%28born+-died%29&source=bl&ots=q3BIvtyuEh&sig=vg8Xn5kF5-EACTQ_vhtTJReGx_o&hl=en#v=snippet&q=ratanchand&f=false. 
  2. Ratanchand Hirachand – freedom fighter
  3. The Madras Stock Exchange official year-book: Volume 18. 1971. பக். 590. https://books.google.com/books?id=qGAiAQAAMAAJ&q=ratanchand+hirachand&dq=ratanchand+hirachand&source=bl&ots=mR4weS1WTN&sig=lJLtYXqnavWMSkxrWocq25S_kwo&hl=en&sa=X&ei=DeFOUIb7OI3krAeOpIGIDA&ved=0CEwQ6AEwBjgK. 
  4. Encyclopaedia Of Professional Education (10 Vol.) By B.R. Sinha. 2003. பக். 105. https://books.google.com/books?id=AE3k6fhL2fEC&pg=PA105&lpg=PA105&dq=ratanchand+hirachand&source=bl&ots=ZlFZNT2NqJ&sig=Iwe0SwMxHVpDDDAQC_7NfOayICI&hl=en&sa=X&ei=seBOUNelGIHzrQeRy4GADw&ved=0CFMQ6AEwBw#v=onepage&q=ratanchand%20hirachand&f=false. 
  5. Acarya Kundakunda's Samayasara By Appaswami Chakravarti, Amṛtacandra, Kundakunda, Kundakunda. 2008. பக். 10. https://books.google.com/books?id=pQ0vRfnW69oC&pg=PA10&lpg=PA10&dq=ratanchand+hirachand&source=bl&ots=iHdIiy794d&sig=sa0TKxaEWdE9Uo164HLciqddV6g&hl=en&sa=X&ei=seBOUNelGIHzrQeRy4GADw&ved=0CFkQ6AEwCA#v=onepage&q=ratanchand%20hirachand&f=false. 
  6. India's Industrialists, Volume 1 By Margaret Herdeck, Gita Piramal. 1985. பக். 451. https://books.google.com/books?id=xcbBEHHI-90C&pg=PA451&lpg=PA451&dq=ratanchand+hirachand&source=bl&ots=0fIyg2kNxw&sig=8USveTbBsWvDILWE_eKQRV1ZQDE&hl=en&sa=X&ei=seBOUNelGIHzrQeRy4GADw&ved=0CDcQ6AEwAg#v=onepage&q=ratanchand%20hirachand&f=false. 
  7. HND Pune » About Us பரணிடப்பட்டது 1 சனவரி 2012 at the வந்தவழி இயந்திரம்
  8. [1]