உள்ளடக்கத்துக்குச் செல்

இரத்தத் திலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரத்தத் திலகம்
இயக்கம்தாதா மிராசி
தயாரிப்புபஞ்சு அருணாசலம்
நேஷனல் மூவீஸ்
கதைகண்ணதாசன்
பி.சி. கணேசன்
தியாகன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
சாவித்திரி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இரத்தத் திலகம் (Ratha Thilagam) 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கண்ணதாசன் உரையாடல் எழுதி, தாதா மிராசியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கதைச்சுருக்கம்

[தொகு]

குமார் (சிவாஜி கணேசன்), கமலா (சாவித்திரி) ஆகிய இருவரும் கல்லூரித் தோழர்கள் இருவருக்கும் காதல் மலர்கிறது. கல்லூரி படிப்பு முடிந்தபிறகு கமலா தன் தாய் தந்தையைக் காண சீனா செல்கிறார். கமலாவின் தந்தை சீனாவில் வணிகம் செய்துவந்த ஒரு தமிழர். அதனால் அங்கேயே குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் 1962 அக்டோபரில் இந்திய சீனப் போர் துவங்குகிறது. போரில் ஈடுபடும் நோக்கத்துடன் குமார் இந்திய இராணுவத்தில் இணைந்து மேஜராக ஆகிறார். அதேசமயம் சீனாவில் உள்ள இந்தியர்கள் வெளியேறவேண்டும் அல்லது காவலில் இருக்கவேண்டும் என சீன அரசு உத்தரவிடுகிறது. கமலாவின் குடும்பத்தினர் இந்தியா திரும்புகின்றனர். ஆனால் கமலா அதற்கு மறுத்து தான் பிறந்த சீனாவே தன் தாய்நாடு என அங்கேயே தங்கிவிடுகிறாள். சீன இராணுவ மருத்துவரைத் திருமணம் செய்துகொண்டு சீன இராணுவத்தில் இணைகிறாள். இதைச் செய்தித் தாளில் படித்த குமார் ஆத்திரம் அடைகிறான்.

இராணுவத்தில் சேர்ந்த குமார் இந்திய எல்லையில் இருக்க கமலா அதை ஒட்டிய சீன எல்லையில் பணிபுரிகிறாள். கமலா இரவு நேரத்தில் இந்திய இராணுவத்து முகாமை டார்ச் ஒளிசமிக்ஞை வழியாக தொடர்பு கொள்கிறாள். மறு எல்லையில் உள்ள குமார் சமிக்ஞையை ஏற்று இருவரும் சந்திக்கின்றனர். கமலா மீது குமார் கோபம் அடைகிறான். இந்திய நாட்டுக்கு உதவவே சீன இராணுவத்தில் சேர்ந்ததாக கமலா கூறி இந்திய இராணுவத்துக்கு சாதகமாக உளவு பார்ப்பதாக கூறுகிறாள். அவ்வாறை அவள் உளவு பார்த்து வருகிறாள். இறுதியில் அவள் கணவனால் அவளது செயல் கண்டறியப்பட்டதா, இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.

நடிகர்கள்

[தொகு]

இசை

[தொகு]

படத்துக்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார்.[1] "ஓரு கோப்பையிலே", "பசுமை நிறைந்த" போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.[2] இப்படத்தில் "போகாதே போகாதே" என்றபாடலை மனோரமா சொந்தமாக பாடி நடித்தார்.[3]

எண். பாடல் பாடகர்கள் எழுதியவர் நீளம்
1 புத்தன் வந்த டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன் 02:55
2 ஹேப்பி பர்த்டே எல். ஆர். ஈஸ்வரி 03:22
3 ஒரு கோப்பையிலே டி. எம். சௌந்தரராஜன் 02:33
4 பனிபடர்ந்த டி. எம். சௌந்தரராஜன் 06:06
5 பசுமை நிறைந்த டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 03:49
6 போகாதே போகாதே மனோரமா 01:56
7 தாழம்பூவே டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி 05:53
8 வாடைக் காற்றம்மா எல். ஆர். ஈஸ்வரி 03:27

உசாத்துணை

[தொகு]
  1. "Ratha Thilagam Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 7 January 2015.
  2. Randor Guy (17 October 2015). "Rattha Thilakam (1963)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/rattha-thilakam-1963/article7774391.ece. 
  3. Kanthan (6 October 1963). "இரத்த திலகம்". [[கல்கி (இதழ்)|Kalki]].
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தத்_திலகம்&oldid=3958914" இலிருந்து மீள்விக்கப்பட்டது