இரண்யா வி. பெய்ரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேரா. இரண்யா பெய்ரிசு
Hiranya Peiris
Hiranya Peiris NAM 2012 1 (cropped).jpg
in 2012
பிறப்புஇலங்கை
தேசியம்பிரித்தானியர்
கல்விகேம்பிரிட்ஜ், பிரின்சுடன் பல்கலைக்கழகங்கள்
பணிவானியற்பியல்
பணியகம்இலண்டன் பல்கலைகழகக் கல்லூரி, சுட்டாக்கோல்ம் பல்கலைக்கழகம்

இரண்யா வி. பெய்ரிசு (Hiranya V. Peiris) ஒரு வானியற்பியலாளர் ஆவார். இவர் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூயில் உள்ளார். இவர் அண்ட நுண்ணலைப் பின்னணி கதிர்வீச்சு ஆய்வுக்காகப் பெயர்பெற்றவர் ஆவார். இவர் 2018 இல் 27 அறிவியலாளர்களோடு இணைந்து அடிப்படை இயற்பியலில் புதுமை படைத்தமைக்கான பரிசைப் பெற்றார். இப்பரிசு தொடக்கநிலை அண்டத்தின் விரிவான வான்படங்களை உருவாக்கியதற்காக வழங்கப்பட்டது.

கல்வி[தொகு]

பெய்ரிசு இலங்கையில் பிறந்தார். இவர் 1998 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளவல் பட்டப் படிப்பை முடித்தார்.[1] இவர் முனைவர் பட்ட ஆய்வை பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு முடித்துள்ளார். இதற்கு நாசா 2001 இல் ஏவிய வில்கின்சன் நுண்ணலை சமச்சீரின்மை ஆய்கலத்தைப் (WMAP) பயன்படுத்தினார்.[2][3] இவர் அபுள் ஆய்வாளராக சிகாகோ பல்கலைக்கழகத்தின் காவ்லி அண்ட இயற்பியல் நிறுவனத்தில் ஆய்வு செய்ய சென்றார்.[2]

ஆய்வும் பணியும்[தொகு]

மக்கள் தொடர்பு[தொகு]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

Peiris receiving the Fowler Prize in 2012 from Roger Davies

அடிப்படை இயற்பியல் புதுமைப்படைப்புக்கான பரிசு[தொகு]

அடிப்படை இயற்பியல் புதுமைப்படைப்புக்காக 2018 இல் விருது தந்த 27 பேர் குழுவில் பெய்ரிசுவும் ஒருவர் ஆவார்.[4] வில்கின்சன் நுண்ணலை சமச்சீரின்மை ஆய்கலத்தைப் பயன்படுத்தி தொடக்கநிலைப் புடவியின் விரிவான பரவல் படத்தை உருவாக்கியமைக்காக 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விருதாக வழங்கப்பட்டன.[5] வில்கின்சன் நுண்ணலை சமச்சீரின்மை ஆய்கலம்(WMAP) என்பது நாசாவின் அண்டத் தேட்டக்கல இலக்குத் திட்டமாகும். இது 2001 இல் ஏவப்பட்டதும் புத்தியல் அண்டவியலை முற்றிலுமாக மாற்ற வழிவகுத்தது.[6][7]

வெளியீடுகள்[தொகு]

பெய்ரிசு வெளியீடுகளின் பட்டியல் இங்கே.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்யா_வி._பெய்ரிசு&oldid=2755450" இருந்து மீள்விக்கப்பட்டது