இரண்டாம் வேற்றுமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இரண்டாம் வேற்றுமை என்பது பெயரின் எழுவாய்ப் பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்தும் வேற்றுமை ஆகும். இது செயப்படுப்பொருள் வேற்றுமை என்றும் வழங்கப்படும். இரண்டாம் வேற்றுமையின் உருபு 'ஐ' ஆகும்.

இரண்டாம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள்[தொகு]

"இரண்டா லதனுரு பையே அதன்பொருள்

ஆக்க லழித்த லடைதல் நீத்தல் ஒத்தலுடைமை யாதி யாகும்."[1]

இரண்டாம் வேற்றுமை உருபான 'ஐ' என்ற உருபை ஏற்றதும் (எழுவாய்) பெயர்ச்சொல்லானது கீழ்க்கண்ட பொருள்களை உணர்த்தும்.

  1. ஆக்கப்படுபொருள் ( ஒன்றை உருவாக்குதல்)
  2. அழிக்கப்படு பொருள் ( ஒன்றை இல்லாமல் செய்தல்)
  3. அடையப்படு பொருள் ( ஒன்றை அடைதல்)
  4. நீக்கப்படு பொருள் (ஒன்றை விட்டு நீங்(க்)குதல்)
  5. ஒத்தல் பொருள். (ஒன்றை மற்றொன்றுடன் ஒப்புமைப் படுத்தல்)
  6. உடைமைப் பொருள்.( உடைமை பெற்றிருத்தல்)

ஆகியனவும் பிறவுமாகும்.

சான்று:

  • குடத்தை வனைந்தான் - ஆக்கப்படுபொருள்.
  • கோட்டையை இடித்தான் - அழிக்கப்படு பொருள்.
  • ஊரை அடைந்தான் - அடையப்படு பொருள்
  • வீட்டை விட்டான் - நீக்கப்படு பொருள்
  • புலியைப் போன்றான் - ஒத்தல் பொருள்
  • பொன்னை உடையான் - உடைமைப் பொருள்.

மேற்கோள்[தொகு]

  1. நன்னூல், வேற்றுமையியல், நூற்பா 296.

வெளிப் பார்வை[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_வேற்றுமை&oldid=2511082" இருந்து மீள்விக்கப்பட்டது