இரண்டாம் ருத்திரசிம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் ருத்திரசிம்மனின் நாணாயம்
4-ஆம் நூற்றான்டில் இரண்டாம் ருத்திரசிம்மன் ஆட்சியில் மேற்கு சத்ரபதிகள் இராச்சியம் மேற்கே அரபுக் கடல் முதல் கிழக்கே மத்திய இந்தியாவின் விதிஷா, சாஞ்சி ஏரண் வரை விரிவாக்கம் செய்யப்பட்டது.

இரண்டாம் ருத்திரசிம்மன் (Rudrasimha II) (304–348) மேற்கு இந்தியா அமைந்த மேற்கு சத்ரபதி இராச்சியத்தின் ஆட்சியாளர் ஆவார். இவர் வெளியிட்ட நாணயங்களில் தம்மை ஜீவதாமனின் மகன் எனக்குறிப்பிட்டுள்ளார்.[1]4-ஆம் நூற்றான்டில் இரண்டாம் ருத்திரசிம்மன் ஆட்சியில் மேற்கு சத்ரபதிகள் இராச்சியம் மேற்கே அரபுக் கடல் முதல் கிழக்கே மத்திய இந்தியாவின் விதிஷா, சாஞ்சி ஏரண் வரை விரிவாக்கம் செய்யப்பட்டது. இரண்டாம் ருத்திரதாமன் பௌத்த சமயத்தை ஆதாரித்தார். மத்திய இந்தியாவின் தற்கால மத்திய பிரதேசத்தில் உள்ள விதிஷா சாஞ்சி, ஏரண் மற்றும் தேவ்னி மோரி பகுதிகளில் பல பௌத்த விகாரைகளும், தூபிகளும் நிறுவினார். அவரது நாணயம் இரண்டாம் யசோதாமன் (317–332) மற்றும் மூன்றாம் ருத்திரதாமன் (332–348)ஆட்சியாளர்களுடன் ஒத்துப்போகிறது, அவர்கள் இரண்டாம் ருத்திரசிம்மனின் ஆட்சிக்குட்பட்ட துணை மன்னர்களாக இருந்திருக்கலாம்.[1]

குஜராத்தின் தேவ்னி மோரி பகுதியில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் பௌத்த விகாரைகளும், தூபிகளும், கல்பேழைகளில் மேற்கு சத்ரபதி மன்னர் இரண்டாம் ருத்திரசிம்மனின் நாணயங்களும் கிடைத்துள்ளது.[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]