இரண்டாம் மொழியாக ஆங்கிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெவ்வேறு தாய் மொழிகளைப் பேசும் மக்கள் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக (அந்நிய மொழியாக ஆங்கிலம்) உபயோகிக்கின்றனர். அவர்களுக்கான ஆங்கில கற்பித்தல் முறை இங்ஙனம் அறியப்படுகிறது. ஆங்கிலம் ஒரு இரண்டாம் மொழியாகவோ அல்லது ஒரு கூடுதல் மொழியாகவோ அல்லது பிற மொழி பேசுபவர்களுக்கான ஆங்கிலமாகவோ அறியப்படுகிறது.

பொதுவாக, ஆங்கிலம் எந்நாட்டில் பேசப்படுவதில்லையோ, அங்கு ஆங்கிலம் ஒரு அந்நிய மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. இரண்டாம் மொழியாக ஆங்கிலம் என்பது ஆங்கிலத்திற்கு இரண்டாம் நிலை முக்கியத்துவம் அளிப்பதாக சிலரால் பார்க்கப்படுகிறது. உதாரணமாக, பல்வேறு மொழி பேசப்படும் ஒரு நாட்டில் ஆங்கிலம் இணைப்பு மொழியாகக் கருதப்படுகிறது.

ஆங்கிலம் கற்பதற்கு முன்பே பல மொழிகளைக் கற்ற மாணவர்களால், ஆங்கிலம் ஒரு இரண்டாம் மொழி என்னும் தொடர் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. தாய் மொழி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, ஆங்கிலமொழி கற்போர் சமீப காலமாக, ஆங்கிலம் கற்போர் எனும் தொடர்கள் பிரயோகப் படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]