இரண்டாம் போரோம்மரசத்திரத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் போரோம்மரசத்திரத்
அயூத்தியாவின் அரசர்
ஆட்சிக்காலம்1424–1448
முன்னையவர்இந்த ராச்சா
பின்னையவர்திரைலோக்நாத்
பிறப்பு1386
இறப்பு1448
குழந்தைகளின்
பெயர்கள்
திரைலோக்நாத்
பெயர்கள்
இரண்டாம் போரோம்மரசத்திரத்
மரபுசுபன்னாபம் வம்சம்

இரண்டாம் போரோம்மரசத்திரத் அல்லது இரண்டாம் போரோம் ரச்சத்திரத் ( Borommarachathirat II) மேலும் மன்னர் சம்பிரயா (1386-1448) என்பவர் அயூத்தியா இராச்சியத்தின் அரசராவார். இவரது ஆட்சி அதன் ஆரம்ப விரிவாக்கங்களைக் கண்டது.

வரலாறு[தொகு]

இந்தராசா மன்னரின் இரண்டு மகன்கள் பா தான் பாலத்தில் யானைகள் மீது சண்டையிட்டு இறந்த நிகழ்வை சித்தரிக்கும் ஒரு ஓவியம். இந்த ஓவியம் இப்போது பேங் பா-இன் அரச அரண்மனையிலுள்ள வாரோபாட்பிமான் அறையில் உள்ளது.

இந்த ராச்சாவின் மகனான இவர், இறுதியாக சுபன்னாபம் வம்சத்திற்காக அயூத்திய அரியணையை கைப்பற்றினார். இவருக்கு, இளவரசர் ஐபிராயா மற்றும் இளவரசர் இப்ராயா என்ற இரண்டு மூத்த சகோதரர்கள் இருந்தனர்.

1424 இல், இந்த ராச்சா இறந்தார். அவனுடைய இரண்டு சகோதரர்களும் அரியணைக்கு போட்டியிட்டு போரில் ஈடுபட்டனர். போரில் இருவரும் இறந்தனர். அரியணையை சம்பிரயாவிடம் வந்தது. 1433 ஆம் ஆண்டில் அங்கோர் தோம் நகரை கொள்ளையடித்து கெமர்களை அடிபணியச் செய்ய சியாமியப் படைகளை வழிநடத்தினார். இந்த தாக்குதல் இறுதியில் கெமர்களை அங்கோர் தோமை கைவிட்டு தங்கள் தலைநகரை மேலும் தென்கிழக்குக்கு மாற்றியது. [1] :29

சான்றுகள்[தொகு]

  1. Chakrabongse, C., 1960, Lords of Life, London: Alvin Redman Limited