இரண்டாம் பிரான்சிசு, புனித உரோமைப் பேரரசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் பிரான்சிஸ் (ஆஸ்திரியாவின் முதலாம் பிரான்சிஸ்)
புனித ரோமப் பேரராசன், ஆஸ்திரியப் பேரரசன்,
ஹங்கேரி, பொஹீமியா மன்னன், குரொவேசியா, சிலவ்வேனிய மன்னன், இத்தாலிய மன்னன்
ஆட்சிபுனித ரோமப் பேரரசனாக -
மார்ச் 1 1792 - ஆகஸ்ட் 6 1806;
ஆஸ்திரியப் பேரரசனாக -
ஆகஸ்ட் 11 1804 - மார்ச் 2 1835
முன்னிருந்தவர்லெப்போல்ட் II
பேர்டினண்ட் I
மனைவிகள்
  • 1788-90 - எலிசபெத்
  • 1790-1807 - மரீயா தெரேசா
  • 1808-16 - மரீயா லுடோவிக்கா
வாரிசு(கள்)லூயிஸ் எலிசபெத்
மரீ லூயிஸ்
பேர்டினண்ட்
மரீயா லெப்போல்டினா
மரீயா கிளெமெண்டீனா
மரீயா கரொலைன்
பிரான்ஸ் கார்ல்
மரீயா அனா
முழுப்பெயர்
பிரான்சிஸ் ஜோசப் சார்ல்ஸ்
மரபுஹப்ஸ்பூர்க்-லொரெயின்
தந்தைலெப்போல்ட் II
தாய்மரீயா லூயிசா

புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரான்சிஸ் (Francis II, Holy Roman Emperor, ஜெர்மன் மொழி: Franz II, Heiliger Römischer Kaiser, பெப்ரவரி 12, 1768மார்ச் 2, 1835) என்பவர் புனித ரோமப் பேரரசின் கடைசி மன்னர். இவன் 1792 ஆம் ஆண்டில் இருந்து 1806 வரை பதவியில் இருந்தார். ஆகஸ்ட் 6, 1806 இல் அவுஸ்டர்லித்ஸ் என்ற இடத்தில் பிரான்சின் முதலாம் நெப்போலியனுடன் இடம்பெற்ற போரில் பெரும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பதவியிழந்தார். 1804 ஆம் ஆண்டு இவர் ஆஸ்திரியப் பேரரசை உருவாக்கி ஆஸ்திரியாவின் முதலாம் பிரான்சிஸ் என்ற பெயரில் அதன் முதலாவது பேரரசன் ஆனார். 1835 ஆம் ஆண்டு வரை ஆஸ்திரியாவின் பேரரசனாகப் பதவி வகித்து இரண்டு பேரரசுகளை ஆண்ட ஒரேயொரு மன்னன் பெயரைப் பெற்றான். அவுஸ்டர்லித்சில் தோல்வியடைந்தாலும் முதலாம் பிரான்சிஸ் தொடர்ந்து நெப்போலியனை எதிர்த்து போரிட்டு மேலும் பல தோல்விகளைச் சந்தித்தான். எனினும் பிரான்சிசின் மகள் ஆஸ்திரியாவின் மரீ லூயிஸ் முதலாம் நெப்போலியனை மார்ச் 10, 1810 இல் மணம் புரிந்து பிரான்சின் அரசியானாள்.[1][2][3]

படிமங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wheatcroft 2009, ப. 233
  2. Wheatcroft 2009, ப. 234
  3. Wheatcroft 2009, ப. 235