இரண்டாம் டகேடா இசுமோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டகேடா இசுமோ

டகேடா இசுமோ II (Takeda Izumo II, 1691-1756) என்பவர் ஒரு யப்பானிய நாடக ஆசிரியர். இவர் டேக்மோட்டோ நாடக அரங்கின் சிக்கிமாட்சு மான்செமோனின் நாடக வாரிசாவார். இவர் மிகவும் பிரபலமான மூன்று வரலாற்று நாடகங்களை எழுதியுள்ளார். அவை சியூஷின்குரா அண்ட் தி சீக்ரெட்ஸ் ஆஃப் காலிகிராபி (1746), யோஷிட்சுன் அண்ட் தௌசண்ட் செர்ரி ட்ரீஸ் (1747), தி ட்ரெஷரி ஆஃப் லாயல் ரிடெய்னர்ஸ் ( 1748) ஆகியவை ஆகும். இவரது படைப்புகள் குறித்து எழுதிய லியோனார்ட் ப்ரோங்கோ "உயர்ந்த இலக்கியப் பண்புகளைக் கொண்டுள்ளது, இசுமோவின் எழுத்து மறுக்க முடியாத பல்வேறு, செழுமை மற்றும் நாடகத்தன்மையைக் கொண்டுள்ளது" என்று எழுதியுள்ளார்.[1]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_டகேடா_இசுமோ&oldid=3860795" இலிருந்து மீள்விக்கப்பட்டது