இரண்டாம் சிம்னாபாய்
| இரண்டாம் சிம்னாபாய் | |
|---|---|
| பிறப்பு | 1872 |
| இறப்பு | 1958 |
இரண்டாம் சிம்னாபாய் (Chimnabai II) பிரித்தானிய இந்தியாவில் குசராத்தின் பரோடா சமத்தானத்தின் இராணி ஆவார். 1872 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். மகாராசா சாயாச்சிராவ் கெய்க்வாட்டின் இரண்டாவது இராணியாக அறியப்படுகிறார். இந்திய வாழ்க்கையில் பெண்களின் நிலை (1911) என்ற கட்டுரையை இவர் எழுதினார். மேலும் அகில இந்திய மகளிர் மாநாட்டின் முதல் தலைவராகவும், அதே போல் தேசிய மகளிர் மன்றத்தின் தலைவராகவும் இருந்தார்.
வாழ்க்கை வரலாறு.
[தொகு]1885 ஆம் ஆண்டில் சாயாச்சிராவ் கெய்க்வாட்டை திருமணம் செய்து கொண்ட பிறகு சிறீமண்ட்டு கசாராபாயாக இருந்த இவர் இரண்டாம் சிம்னாபாய் ஆனார்.[1]
ஒரு முற்போக்கான பெண்ணாகிய இவர் சிறுமிகளுக்கான கல்விக்காக பணியாற்றினார். பர்தா முறை மற்றும் குழந்தை திருமணத்தை ஒழித்தார், மேலும் 1927 ஆம் ஆண்டில் அகில இந்திய மகளிர் மாநாட்டின் முதல் தலைவரானார்.[2][3] இவர் 'இந்திய வாழ்வில் பெண்களின் நிலை' (1911) என்ற நூலின் ஆசிரியராக இருந்தார்.[4]
இவரது மகள் இந்திரா தேவி, கூச் பெகரின் மகாராசாவான சிதேந்திர நாராயணனின் பட்டத்து அரசியானார்.[5] 1958 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 23 ஆம் தேதியன்று இவர் இறந்தார்.
படைப்புகள்.
[தொகு]- Chimnabai II (Maharani of Baroda.); Siddha Mohana Mitra (1911). Position Of Women In Indian Life. New York: Longman's, Green & Co.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Taylor, Miles (2018). "9. Mother of India". Empress: Queen Victoria and India (in ஆங்கிலம்). New Haven: Yale University Press. p. 202. ISBN 978-0-300-11809-4.
- ↑ "Past Presidents". AIWC: All India Women's Conference. Archived from the original on 19 March 2014. Retrieved 2014-03-19.
- ↑ Geraldine Forbes; Geraldine Hancock Forbes (28 April 1999). Women in Modern India. Cambridge University Press. pp. 79–. ISBN 978-0-521-65377-0.
- ↑ Jhala, Angma Dey (2014). "8. Memoirs of Maharanis: the politics of marriage, companionship, and love in late-colonial princely India". In Towheed, Shafquat (ed.). New Readings in the Literature of British India, c. 1780-1947 (in ஆங்கிலம்). Columbia University Press. pp. 193–209. ISBN 978-3-8382-5673-3.
- ↑ Poddar, Abhishek; Gaskell, Nathaniel; Pramod Kumar, K. G; Museum of Art & Photography (Bangalore, India) (2015). "Catalogue". Maharanis: women of royal India (in English). Ahmedabad: Mapin Publishing. pp. 75–105. ISBN 978-93-85360-06-0. OCLC 932267190.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
மேலும் வாசிக்க
[தொகு]- Moore, Lucy (2004) Maharanis: the lives and times of three generations of Indian princesses. London: Viking பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-670-91287-5
- Weeden, Edward St Clair (1911). A year with the Gaekwar of Baroda. Boston : D. Estes & Co.