இரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போர்
இரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
|
|||||||||
பிரிவினர் | |||||||||
பிரித்தானியா | பர்மிய இராச்சியம் | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
மேஜர் ஜெனரல் ஹென்றி காட்வின் | மௌங் கி கியௌக் லோன் |
இரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போர் (Second Anglo-Burmese War or the Second Burma War) பிரித்தானிய கிழக்கிந்திய படைகளுக்கும் - பர்மிய இராச்சியப் படைகளுக்கும் 5 ஏப்ரல் 1852 முதல் 20 சனவரி 1853 முடிய ஏறத்தாழ மூன்றாண்டுகள் நடைபெற்ற இரண்டாவது போராகும். இப்போரின் முடிவில் பிரித்தானிய இந்தியா அரசு பர்மாவின் ஐராவதி ஆற்றுக்கு கீழ் உள்ள ரங்கூன் உள்ளிட்ட சமவெளிப் பகுதிகள் பிரித்தானிய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.[1] இப்போரின் முடிவில் பர்மிய இராச்சியம் மூன்றில் ஒரு பங்காகக் குறுகியது.
போரின் காரணங்களும், முடிவுகளும்
[தொகு]யாந்தோபூ உடன்படிக்கையில் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய, கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரல் டல்ஹவுசி பிரபு 1852இல் கடற்படை அதிகாரி லம்பார்ட்டை ரங்கூனுக்கு கடற்படைகளுடன் அனுப்பினார். [2]
1852-1853இல் நடந்த இரண்டாம் பர்மியப் போரில், ஆங்கிலேயர் தெற்கு பர்மாவின் ஐராவதி ஆற்றின் தெற்கு சமவெளியில் உள்ள ரங்கூனை தலைமையகமாகக் கொண்ட பெகு பிராந்தியத்தை கைப்பற்றினர். இப்போரின் விளைவால் பர்மிய அரச மாளிகையில் கலகம் விளைந்தது. பர்மிய அரசர் பாகன் மிங் (1846–1852) ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டு, அவரது மாற்றாந்தாயின் மகன் மிங்டோன் மிங் (1853–1878) பர்மிய அரச பதவியில் அமர்த்தப்பட்டார்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Stephen Luscombe (photos) Burma: The Second War
- George Dibley The Burma War of 1851