இரணியவதைப் பரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரணியவதைப் பரணி என்பது பரணி இலக்கியங்களில் ஒன்று. இந்த நூல் தனி நூலாக வெளிவரவில்லை. எனினும் ‘செந்தமிழ்’ என்னும் 1918-ஆம் ஆண்டு மாத இதழில் வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. காலம் பற்றிய குறிப்புகளும் இல்லை. ஒப்புநோக்கி ஆராய்ந்து பார்க்கும்போது இது 13-ஆம் நூற்றாண்டு நூல் எனத் தெரியவருகிறது.

பிரகலாதனுக்காகத் திருமால் நரசிங்க அவதாரம் எடுத்துப் பிரகலாதன் தந்தை இரணியனை வதைத்த கதையை இந்நூல் பாடுகிறது. இந்த நூல் திருவரங்கப் பெருமான் மீது பாடப்பட்டது.

காலத்தால் முந்திய கலிங்கத்துப் பரணி போன்ற அமைப்புகளை இது கொண்டுள்ள இது, 698 தாழிசைகள் கொண்டது.

பகுப்புகள்[தொகு]

  1. கடவுள் வாழ்த்து
  2. கடைத்திறப்பு
  3. காடு பாடியது
  1. கோயில் பாடியது
  2. தேவியைப் பாடியது
  3. பேய்களைப் பாடியது
  1. இந்திர சாலம்
  2. பேய் முறைப்பாடு
  3. காளிக்குக் கூளி கூறியது
  1. களம் காட்டல்
  2. கூழ் அடுதலும் இடுதலும்
  3. வாழ்த்து
  • நம்மாழ்வார் வாழ்த்துடன் நூல் தொடங்குகிறது.
  • திருவரங்கநாதன் பெருமை பேசப்படுகிறது.
  • பேய்கள் சோறாக்க நெல் குத்தும்போது வரும் வள்ளைப்பாட்டுகள் “கம்மலோ கம்முலக்காய்” என முடிகின்றன.
  • நரசிங்க மூர்த்தி தோன்றும் பகுதியில் பத்திச்சுவையும், வீரச்சுவையும் ததும்புகின்றன.
  • காளிக்குக் கூளி கூறிய வரலாற்றில் திருஞான சம்பந்தர் வரலாறு கூறப்பட்டுள்ளது.

கருவிநூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரணியவதைப்_பரணி&oldid=3295288" இலிருந்து மீள்விக்கப்பட்டது