இரட்டை வால் தேன்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரட்டை வால் தேன்சிட்டு
ஆண்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: நெக்டாரினிடே
பேரினம்: ஏதோபைகா
இனம்: ஏ. கிறிசுடினே
இருசொற் பெயரீடு
ஏதோபைகா கிறிசுடினே
சுவைன்கோ, 1869

இரட்டை வால் தேன்சிட்டு (Fork-tailed Sunbird)(ஏதோபைகா கிறிசுடினே) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இந்த சிற்றினம் முதன்முதலில் 1869-ல் இராபர்ட் சுவைன்கோவால் விவரிக்கப்பட்டது.

பரவல்[தொகு]

இரட்டை வால் தேன்சிட்டு சீனா, ஆங்காங், லாவோஸ் மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது.[2]

வாழிடம்[தொகு]

இரட்டை வால் தேன்சிட்டின் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது ஈரமான தாழ் நில காடுகள் ஆகும். இந்த சிறிய பறவைகள், வளைந்த அலகினைக் கொண்டது. இதனுடைய ஒலி மென்மையானது. இந்த பறவையின் படம் ஆங்காங்கில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் தபால் தலையில் அச்சிடப்பட்டுள்ளது.[3]

பெண்

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Aethopyga christinae". IUCN Red List of Threatened Species 2016: e.T103810484A94566115. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103810484A94566115.en. https://www.iucnredlist.org/species/103810484/94566115. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. "Aethopyga christinae (Fork-tailed Sunbird) - Avibase". avibase.bsc-eoc.org. Retrieved 2022-06-29.
  3. "Fork-tailed Sunbird - eBird". ebird.org (in ஆங்கிலம்). Retrieved 2022-06-29.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aethopyga christinae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_வால்_தேன்சிட்டு&oldid=3452878" இலிருந்து மீள்விக்கப்பட்டது