இரட்டை நிலை உளவாளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரட்டை நிலை உளவாளி (Double Agent) என்பவர் ஒரு நாட்டின் உளவுத்துறை ஒற்றனாக இருந்து கொண்டே, அந்நாட்டின் மீது இன்னொரு நாட்டுக்காக வேவு பார்ப்பவர். உளவுத்துறையின் ஒரு பிரிவாகிய எதிர்-உளவுத்துறை (Counter Intelligence) இத்தகு இரட்டை நிலை ஒற்றர்களைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துகிறது. ஒரு இரட்டை நிலை உளவாளியை புதிதாக உருவாக்க இரு வழிகள் உள்ளன - தன்னாட்டு உளவாளியை எதிரி நாட்டு உளவுத்துறையில் தந்திரமாகச் சேர்த்து விட்டு அவர் மூலம் தகவல்களைப் பெறுவது ஒரு வழி. எதிரி நாட்டு உளவாளி ஒருவரை தம் பக்கத்துக்கு (ஆசை காட்டியோ, பயமுறுத்தியோ அல்லது நயமாகப் பேசியோ) இழுப்பது இன்னொரு வழி. தகவல்களை சேகரிப்பது தவிர வேண்டுமென்றே எதிரிக்கு தவறான தகவல்களைத் தரவும் இரட்டை நிலை ஒற்றர்கள் பயன்படுகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_நிலை_உளவாளி&oldid=2750917" இருந்து மீள்விக்கப்பட்டது