உள்ளடக்கத்துக்குச் செல்

இரட்டை ஒலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரட்டை ஒலி
எல்பி ஸ்டீரியோ பேனர்களின் தொகுப்பு

இரட்டை ஒலி (ஸ்டீரியோ ஒலி / Stereo Sound) என்பது, ஒலி இரண்டு தனித்தனி வழிகளில் கேட்கப்படும் முறையாகும்[1]. ஒரு வழி இடது பக்கம். மற்றொரு வழி வலது பக்கம். இந்த இரண்டு வழிகளிலும் ஒலி சற்றே வேறுபட்டதாக அனுப்பப்படும்.

இந்த முறையால், ஒலி ஒரு இடத்தில் இருந்து வருகிறது என்ற உணர்வு உருவாகும். உதாரணமாக, ஒரு பாடலில் ஒரு இசைக்கருவி இடது பக்கத்தில் இருந்து கேட்கலாம். மற்றொரு இசைக்கருவி வலது பக்கத்தில் இருந்து கேட்கலாம். பாடகர் நடுவில் பாடுவது போல தோன்றும். இரட்டை ஒலி, மனிதர்கள் இயற்கையில் கேட்கும் முறையைப் போல அமைந்தது. மனிதர்களுக்கு இரண்டு காதுகள் உள்ளதால், ஒலி எங்கிருந்து வருகிறது என்பதை அறிய முடிகிறது. அதே உணர்வை இரட்டை ஒலி உருவாக்குகிறது.

திரைப்படங்களில் இரட்டை (ஸ்டீரியோ) ஒலி வந்தபின், பார்வையாளர்களின் அனுபவம் மிகவும் மாறியது. காட்சியில் நடக்கும் செயல்கள், நடப்பு, மழை, கூட்டத்தின் சத்தம் போன்றவை உண்மைக்கு மிக அருகில் கேட்கத் தொடங்கின. இதனால், திரைப்படம் பார்ப்பது இன்னும் உயிர்ப்பாக ஆனது.

தமிழ் திரைப்படங்களில், முதன்முறையாக இரட்டை ஒலி பயன்படுத்தப்பட்ட திரைப்படமாக குறிப்பிடப்படுவது ரஜினிகாந்த் நடித்த “ப்ரியா” ஆகும். இந்த திரைப்படம் 1978'களின் தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்தின் ஒலி அமைப்பு, அந்த காலத்தில் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது.

இன்றைக்கு, இரட்டை ஒலி என்பது இசை, திரைப்படம், தொலைக்காட்சி, கைபேசி போன்ற அனைத்திலும் அடிப்படை அம்சமாக உள்ளது. ஹெட்போன், இயர்போன், இரண்டு ஒலிப்பெருக்கிகள் போன்றவற்றில் இந்த ஒலி முறை மிகச் சிறப்பாக செயல்படுகிறது. இதனால், கேட்பவர்களுக்கு தெளிவாகவும், ஆழமாகவும் ஒலி அனுபவம் கிடைக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இரட்டை ஒலி from thehindu.com". Retrieved 2019-08-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_ஒலி&oldid=4467536" இலிருந்து மீள்விக்கப்பட்டது