இரட்டைத்தலைப் பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரட்டைத் தலைப் பாம்பு
Double headed turquoise serpentAztecbritish museum.jpg
செய்பொருள்மரம், தெர்க்கோயிசு, பைன் பிசின், ஓடுகள் முதலியவை
அளவு20.5 x 43.3 சமீ
உருவாக்கம்15ம்/16ம் நூற்றாண்டு
இடம்மெக்சிக்கோவில் செய்யப்பட்டது
தற்போதைய இடம்அறை 27, பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன்

இரட்டைத்தலைப் பாம்பு என்பது, பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு அசுட்டெக் சிற்பம் ஆகும். இது பெரும்பாலும் தெர்க்கோயிசு கனிமத் துண்டுகளால் மூடப்பட்ட மரத்தால் ஆனது. பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள இதுபோன்ற ஒன்பது பொருட்களுள் இது ஒன்று. ஐரோப்பா முழுவதும் இதுபோல் ஏறத்தாழ 25 பொருட்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.[1] மெக்சிக்கோவின் அசுட்டெக்கிலிருந்து வந்த இது மதச் சடங்குகளின்போது அணிந்தோ, காட்சிக்கு வைக்கப்பட்டோ இருக்கலாம் எனத் தெரிகிறது.[2] எசுப்பானிய ஆக்கிரமிப்பாளனான ஏர்மன் கோர்ட்டெசு 1519ல் இப்பகுதியைக் கைப்பற்றியபோது, அசுட்டெக் பேரரசன் இரண்டாம் மொக்டெசுமா ஏர்மனுக்கு இதைப் பரிசாக வழங்கியிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.[2] இதன் சித்திரவடிவு முடிப்பு, தெர்க்கோயிசு, நண்டு ஓடு, சங்கு ஓடு ஆகியவற்றின் துண்டுகளால் ஆனது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mexican turquoise mosaics, British Museum, accessed 28 August 2010
  2. 2.0 2.1 Double headed serpent, A History of the World in 100 Objects, BBC. accessed 27 August 2010
  3. Double-Headed Serpent, British Museum, accessed September 2010

இவற்றையும் பார்க்கவும்[தொகு]