உள்ளடக்கத்துக்குச் செல்

இரட்டைக்கிளவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரட்டைக்கிளவி என்பது இரட்டைச் சொற்களாய்ச் சேர்ந்து ஒரு தன்மைப்பட்டு நின்று, வினைக்கு அடைமொழியாய்க் குறிப்புப் பொருள் உணர்த்தி வருவதாகும். இது இரட்டைச் சொல்லாகவே வரும். பிரித்தால் பொருள் தராது.

எ.கா:

  1. நீர் சலசல என ஓடிற்று
  2. மரம் மடமட என முறிந்தது
  3. கசகச என வேர்வை
  4. கலகல என சிரித்தான்
  5. கடகட ப்பான பேச்சு
  6. கமகம என மணந்தது முல்லை
  7. கரகரத்த குரலில் பேசினான்
  8. கிச்சுக்கிச்சு மூட்டினாள் பேத்தி
  9. கிசுகிசு ஒன்றைக் கேட்டேன்
  10. கிடுகிடு பள்ளம் பார்த்தேன்
  11. கிளுகிளு படம் பார்த்தாராம்
  12. கிறுகிறு என்று தலை சுற்றியது
  13. கீசுகீசு என குருவிகள் கத்தின
  14. குசுகுசு என்று அதை சொன்னார்
  15. குடுகுடு கிழவர் வந்தார்
  16. குபுகுபு என குருதி கொட்டியது
  17. கும்கும் என்றும் குத்தினார்
  18. குளுகுளு உதகை சென்றேன்
  19. குறுகுறுத்தது குற்ற நெஞ்சம்
  20. கொழகொழ என்று ஆனது சோறு
  21. கொழுகொழு என்று குட்டி
  22. சதசத என்ற சேற்றில் விழுந்தேன்
  23. சரசர என்று மான்கள் ஓடின
  24. சவசவ என்று முகம் சிவந்தது
  25. சாரைசாரையாக மக்கள் வந்தனர்
  26. சிலுசிலு என் காற்று வீசியது
  27. சுடசுட தோசைக் கொடுத்தாள்
  28. சொரசொரப்பான தாடி
  29. தகதக மின்னும் மேனி
  30. தடதட என் கதவைத் தட்டினான்
  31. தரதர என்று இழுத்து சென்றான்
  32. தளதள என்று ததும்பும் பருவம்
  33. திக்குத்திக்கு என் நெஞ்சம் துடிக்கும்
  34. திடுதிடு என நுழைந்தான் (திடு திடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு” - திருப்புகழ் )
  35. திபுதிபு என மக்கள் புகுந்தனர்
  36. திருதிரு என விழித்தான்
  37. துறுதுறு என்ற விழிகள்
  38. தைதை என்று ஆடினாள்
  39. தொள தொள என சட்டை அணிந்தார்
  40. நங்குநங்கு எனக் குத்தினான்
  41. நணுகுநணுகு எனும் அளவில் அச்சம் மேலிட (இலக்கியம்)
  42. நறநற என பல்லைக் கடித்தான்
  43. நைநை என்று அழுதாள்
  44. நொகுநொகு (நெகுநெகு) என்று மாவை அரைத்தாள்
  45. பக்குப்பக்கு என்று நெஞ்சு அடிக்கும்
  46. படபட என இமைகள் கொட்டும்
  47. பரபரப்பு அடைந்தது ஊர்
  48. பளபள என்று பாறை மின்னியது
  49. பிசுபிசுத்தது போராட்டம்
  50. பேந்தப்பேந்த விழித்தான்
  51. பொதபொத பன்றியின் வயிறு
  52. பொலபொல என வடித்தாள் கண்ணீர்
  53. மங்குமங்கு (மாங்கு மாங்கு) என்று வேலை செய்தால் போதுமா?
  54. மசமச என்று நிற்கவில்லை
  55. மடக்கு மடக்கு எனவும் குடித்தார்
  56. மடமட என நீரைக் குடித்தார்
  57. மலங்க மலங்க விழித்தான்
  58. மள மள என எல்லாம் நிகழ்ந்தது
  59. மாங்குமாங்கு என்று உழைப்பார்
  60. மினுகு மினுகு என்று செழிப்புற்றிருந்த மேனி (இலக்கியம்)
  61. முணுமுணுத்து அவர் வாய்
  62. மொச்சுமொச்சு என்று தின்றார் பாட்டன்
  63. மொசுமொசு என மயிர்
  64. மொலு மொலென்று அரிக்கிறது சிரங்கு
  65. மொழுமொழு என்று தலை வழுக்கை.
  66. மொறு மொறு என்று சுட்டாள் முறுக்கு
  67. லபக்கு லபக்கென்று முழுங்கினார்
  68. லபலப என்று அடித்துக் கொண்டாள்
  69. லபோலபோ என அடித்துக் கொண்டாள்
  70. லொடலொட என்றும் பேசுவாள்
  71. வடவட என வேர்த்தன கைகள்
  72. வதவத என ஈன்றன குட்டிகள்
  73. வழவழ என்று பேசினாள் கிழவி (“வழ வழ என உமிழ் அமுது கொழ கொழ என ஒழிகி விழ” - திருப்புகழ்)
  74. விக்கி விக்கி அழுதது குழந்தை
  75. விசுவிசு என்று குளிர் அடித்தது
  76. விறுவிறுப்பான கதையாம்
  77. வெடவெட என நடுங்கியது உடல்
  78. வெடுவெடு என நடுங்கினாள்
  79. வெதுவெதுப்பான நீரில் குளித்தாள்
  80. வெலவெல என்று நடுங்கினேன்.
  81. ஜிகிஜிகு ராணி ஜில்ராணி
  82. தொபு தொபுவென்று மழை வெள்ளம் கொட்டியது

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டைக்கிளவி&oldid=3937884" இலிருந்து மீள்விக்கப்பட்டது